கடந்த வருடம் நவம்பர் மாதம் 30 ஆம் திகதி வவுனதீவில் கடமையிலிருந்த போது கொலைசெய்யப்பட்ட பொலிஸ் அதிகாரி கனேஷ் தினேஷின் மூத்த சகோதரிக்கு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவால் அரசாங்க நூலக உதவியாளர் நியமனம் வழங்கப்பட்டது.

நேற்று (15) முற்பகல் தெஹியத்தகண்டிய, நுவரகல மகா வித்தியாலய விளையாட்டரங்கில் இடம்பெற்ற மகாவலி காணி உறுதிகள் வழங்கும் நிகழ்வு மற்றும் மகாவலி விவசாய பாராட்டு, பரிசளிப்பு விழாவில் வைத்து இந்த நியமனம் ஜனாதிபதியால் வழங்கி வைக்கப்பட்டது.

வவுனதீவில் கடமையில் இருந்த போது கொலைசெய்யப்பட்ட பொலிஸ் அதிகாரி இந்திக்க பிரசன்னவின் குடும்ப நலன்பேணலுக்காகவும் ஜனாதிபதி அவர்களினால் இதற்கு முன்னர் நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

பொலிஸ் அதிகாரி, அரச தொழில், சகோதரி, கனேஷ் தினேஷ்,