மும்பையில் மூளைச்சாவு அடைந்தவரின் கல்லீரல் தானமாக பெறப்பட்டு 38 நிமிடத்தில் மின்சார ரெயில் மூலம் கொண்டு செல்லப்பட்டு நோயாளிக்கு பொருத்தப்பட்டது.
மும்பை உல்லஸ் நகரைச் சேர்ந்த 53 வயதான சுகாதார உதவியாளர் ஒருவர் கடந்த 13ஆம் திகதி தும்பிவிலியில் நடந்த விபத்தில் சிக்கி காயமடைந்துள்ளார்.
இந்நிலையில், தானேவில் உள்ள ஜுபிட்டர் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் அவருக்கு நேற்று மூளைச்சாவு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவரது உடல் உறுப்புகளை தானம் செய்ய மனைவி முன் வந்தார்.
இந்நிலையில், சுகாதார உதவியாளர் உடலில் இருந்து கல்லீரல், சிறுநீரகங்கள் எடுக்கப்பட்டன. இதில் கல்லீரல் பரேலில் உள்ள குளோபல் வைத்தியசாலைக்கு ஒதுக்கப்பட்டது.
குறித்த வைத்தியசாலையில் உள்ள நோயாளி ஒருவருக்கு உடனடியாக கல்லீரல் பொருத்த முடிவு செய்யப்பட்டது. ஆனால் வீதியில் சென்றால் போக்குவரத்து நெரிசல் காரணமாக காலதாமதம் ஏற்படும்.
இந்நிலையில், உள்ளூர் மின்சார ரெயிலில் கல்லீரலை கொண்டு செல்ல முடிவு செய்தனர். இதுகுறித்து ரெயில்வே நிர்வாகத்துக்கு வைத்தியசாலை சார்பில் தகவல் தெரிவித்தனர். அவர்களும் அதற்கான ஏற்பாடுகளை செய்தனர்.
உடனே கல்லீரலை ஒரு குளிர்சாதன பெட்டியில் வைத்து அம்புலன்சில் தானே வைத்தியசாலையில் இருந்து ரெயில் நிலையத்துக்கு எடுத்து சென்றனர். அங்கிருந்து மின்சார ரெயிலில் 4 பேர் கொண்ட வைத்திய குழுவினர் கல்லீரலை கொண்டு சென்றனர்.
38 நிமிடப் பயணம் செய்து பரேலில் உள்ள குளோபல் வைத்தியசாலைக்கு கொண்டு சென்று நோயாளிக்கு பொருத்தப்பட்டது.
முதல் முறையாக உடல் மாற்று சிகிச்சைக்காக ரெயிலில் உடல் உறுப்பு கொண்டு செல்லப்பட்டது. இதுவே வீதியில் கொண்டு சென்று இருந்தால் 2 மணி நேரம் ஆகி இருக்கும்.
இதுகுறித்து வைத்திய நிர்வாகத்தினர் தெரிவித்ததாவது,
“கல்லீரலை எவ்வளவு சீக்கிரம் கொண்டு சென்று சேர்க்க முடியுமா அவ்வளவு நேரத்தில் கொண்டு செல்ல வேண்டும் என்று முடிவு செய்தோம்.
இதற்காக உள்ளூர் மின்சார ரெயில் சேவையை தெரிவு செய்தோம். தானே வைத்தியசாலையில் இருந்து ரெயில் நிலையத்துக்கு அம்புலன்ஸ் செல்ல தனிப்பாதை ஏற்படுத்தி கொடுத்தனர். பின்னர் ரெயிலில் கல்லீரல் 38 நிமிடத்தில் கொண்டு வரப்பட்டது” என்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM