வவுனியா மாமடு பகுதியில் இன்று காலை 7.30 மணியளவில் கேரளா கஞ்சாவுடன் இளைஞர் ஒருவரை வவுனியா பொலிஸார் கைது செய்துள்ளனர்.

வவுனியா பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் குறித்த இளைஞருக்கு பொலிஸார் சிவில் நபர் போல தொலைபேசியில் தொடர்பினை மேற்கொண்டு தனக்கு கேராளா கஞ்சா வேண்டுமென தெரிவித்துள்ளார்.

அதற்கு குறித்த இளைஞன் 1 கிலா 200 கிராம் கேரளா கஞ்சா 1,20,000 ரூபா என பேரம் பேசியுள்ளார். அதற்கு பொலிஸார் சம்மதம் தெரிவித்திருந்த நிலையில் இன்று காலை 7.30 மணியளவில் மாமடு சந்திக்கு சமூகமளிக்குமாறு குறித்த இளைஞன் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து இன்று காலை  குறித்த பகுதியினை பொலிஸார் சுற்றிவளைத்ததுடன் கஞ்சாவுடன் குறித்த இளைஞனை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

மாமடு கள்ளிக்குளம் பகுதியினை சேர்ந்த 24 வயதுடைய இளைஞரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாகவும் மேலதிக விசாரணைகளின் பின்னர் வவுனியா மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில் ஆயர்படுத்தவுள்ளதாகவும் வவுனியா பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.