(ஆர்.விதுஷா)

திஸ்ஸமஹாராம பகுதியில் சட்டவிரோதமான முறையில் படகு  மூலம் வெளிநாட்டு செல்வதற்கு தயாராகவிருந்த 12 பேர் கைது  செய்யப்பட்டுள்ளதாக  திஸ்ஸமஹாராம பொலிஸ்  நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார். 

திஸ்ஸமஹாராம -பன்னகமுவ  - அளுத்கொடை  பகுதியில்  அமைந்துள்ள  விடுதியொன்றில்  சிலர் சட்டவிரோதமான முறையில்  வெளிநாட்டிற்கு  செல்வதற்கு  தயாராகவுள்ளதாக பொலிசாருக்கு  கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கமைய பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பின்போதே இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். 

இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர்களுள் 06 ஆண்கள், 03 பெண்கள், 04 சிறுவர்களும் உள்ளடங்குவதுடன், மேற்படி தங்குமிட முகாமையாளரும்  கைது செய்யப்பட்டுள்ளார். 

அத்துடன்,  அவர்கள் தங்கியிருந்த   வீட்டிலிருந்து  கைப்பற்றபட்ட பயணபொதிகள், மற்றும் பொருட்களை எடுத்து செல்ல  பயன்படுத்தப்பட்ட  லொறி ஒன்று  உட்பட அதன் சாரதியையும் பொலிஸ் விசேட  அதிரடிப்படையினர்  கைதுசெய்து  திஸ்ஸமஹாராம  பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளனர்.