(ஆர்.யசி)

நாட்டின் பிரச்சினைகளை தீர்க்க அரசாங்கமாக நாம் நடவடிக்கைகள் எடுக்கும்போதெல்லாம் மத தலைவர்களும் ஒரு சிலர் அரசியல் தலைவர்களுமே தீர்வுகளை குழப்புகின்றனர் எனத் தெரிவித்த அமைச்சர் சம்பிக்க ரணவக்க, நாட்டினை மீட்டெடுக்க முடியாதுள்ளமைக்கு இதுவே காரணம் எனவும் குறிப்பிட்டார். 

 

களனி பிரதேசத்தில் இன்று இடம்பெற்ற மக்கள் கூட்டம் ஒன்றிலேயே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார். 

மேலும் இவ்வாறான குழப்பங்களை விளைவிப்பவர்கள்  நாடு குறித்து சிந்துத்து செயற்பட வேண்டும். அதை விடுத்து  அனைத்து வேலைதிட்டங்கலாயையும் தடுக்க ஏதேனும் குழப்பங்களை ஏற்படுத்துவதனால் மக்களே பிரச்சினைகளை சந்திக்க நேரிடும் எனவும் அவர் இதன்போது குறிப்பிட்டார்.