bestweb

சாகச நாயகிகளாக எக்சன் செய்யும் சிம்ரன் = திரிஷா

Published By: Daya

15 Feb, 2019 | 03:16 PM
image

ஆல் இன் பிக்சர்ஸ் சார்பில் மெகா பட்ஜெட்டில் தயாராகும் பெயரிடப்படாத புதிய எக்சன் அட்வென்சர் படத்தில் சிம்ரனும், திரிஷாவும் கதையின் நாயகிகளாக நடிக்கிறார்கள்.

96 படத்தின் வெற்றிக்கு பிறகு திரிஷா ‘திரையுலக மார்கண்டேயி ’யாகியிருக்கிறார். அவர் அடுத்ததாக பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாராகும் சாகசங்கள் நிறைந்த எக்சன் திரைக்கதையில் நடிக்கிறார். இவருடன் ‘இடுப்பழகி’ சிம்ரனும் இணைந்திருக்கிறார்.  இந்த படத்தை  இயக்குநர் சுமந்த் ராதாகிருஷ்ணன் இயக்குகிறார். இவர் ஏற்கெனவே ‘சதுரம் 2’ என்ற திரில்லர் படத்தை இயக்கியவர்.

படத்தைப் பற்றி தயாரிப்பாளர் விஜயராகவேந்திரா பேசுகையில்,

“இந்தியாவில் முதன்முறையாக ஆழ்கடல் சாகசங்களும், எக்சன் காட்சிகளும் நிறைந்த படமாக தயாராகிறது. அத்துடன் ரசிகர்களுக்கு வேறு சில சுவராசியமான விடயங்களும் காத்திருக்கிறது. குறித்த படத்தின் படபிடிப்பு மார்ச் மாதம் முதல் வாரத்தில் தொடங்குகிறது.

சென்னை, பிச்சாவரம், கேரளா, தாய்லாந்து ஆகிய பகுதிகளில் படமாக்க திட்டமிட்டிருக்கிறோம். குறித்த படத்தில் நடிப்பதற்காக சிம்ரனுக்கும், திரிஷாவிற்கும் கடல் சார்ந்த சாகசங்களுக்கான பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.” என்றார். 

இதனிடையே ஆல் இன் பிக்சர்ஸ் தயாரிப்பில், ஜீவா , ஷாலினிபாண்டே நடிப்பில் உருவாகியிருக்கும் ‘கொரில்லா ’என்ற கொமடி படம் கோடையில் வெளியாகவிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தமிழ் திரைப்பட இயக்குநர் வேலு பிரபாகரன்...

2025-07-17 20:11:33
news-image

கவனம் ஈர்க்கும் நடிகர் பரத்தின் 'காளிதாஸ்...

2025-07-17 17:26:41
news-image

நடிகர் எம். எஸ். பாஸ்கர் கதையின்...

2025-07-17 17:27:32
news-image

சாதனை படைக்கும் வடிவேலு - பகத்...

2025-07-17 17:27:01
news-image

நடிகர் ஜீவா நடிக்கும் புதிய படத்தின்...

2025-07-17 17:27:17
news-image

நடிகர் விஜயை முன்னிறுத்தும் 'யாதும் அறியான்...

2025-07-16 01:39:43
news-image

அறிமுக நடிகர் நாகரத்தினம் நடிக்கும் 'வள்ளி...

2025-07-16 01:35:45
news-image

நடிகர் டீஜே அருணாசலம் நடிக்கும் 'உசுரே...

2025-07-16 01:30:48
news-image

விவாகரத்து விடயங்களை உரக்க பேசும் 'தலைவன்...

2025-07-15 21:58:20
news-image

மூன்றாவது முறையாக இணையும் தமன் அக்ஷன்...

2025-07-14 14:33:53
news-image

நடிகர் சிவராஜ் குமார் நடிக்கும் புதிய...

2025-07-14 14:27:32
news-image

பூஜையுடன் தொடங்கிய 'விஷால் 35'

2025-07-14 14:10:36