நாளாந்தம் பதினாறு மணி நேரத்திற்கும்  மேல் நின்றுகொண்டே பணியாற்றுபவர்களுக்கும், ஆறடிக்கும் மேல் வளர்ந்தவர்களுக்கும், வயிற்றில் கட்டி இருப்பவர்களுக்கும், மலச்சிக்கலால் அவதிப்படுபவர்களுக்கும் வெரிகோஸ் வெயின் எனப்படும விரிசுருள் சிரை நோய் ஏற்படும்.

எம்முடைய கால்களில் பாயும் அசுத்தமான குருதியை எடுத்துச் செல்ல Vein எனப்படும் தனி இரத்த குழாய்கள் உள்ளன. இவற்றில் உட்புறம் மற்றும் வெளிப்புறம் என இரண்டு வகை உள்ளன. இவற்றின் மூலமாக அசுத்தமான குருதி பெருஞ்சிரையை அடைந்து அதனையடுத்து இதயத்திற்கு செல்கிறது. இதற்கு Vein இல் உள்ள இரத்த வால்வுகள் உதவி செய்யும்.

இந்த வால்வுகள் சரியாக இல்லாததிருந்தாலோ அல்லது இதன் பணியில் தடையோ அல்லது இடையூறோ ஏற்பட்டாலோ தங்களின் பணியான அசுத்த இரத்தத்தை எடுத்துச் செல்வதில்லை. இதனால் அங்கு அசுத்த இரத்தம் தேங்கி, அந்த குழாய்கள் வீக்கமடைகின்றன.  இதற்கு தான் வெரிகோஸ் வெயின் என்று அழைக்கிறார்கள்.

இத்தகைய பாதிப்பு வந்துவிட்டால் கால் பகுதிகளிலுள்ள தோல்களில் கருமையாக மாறுவதைக் காணலாம். இத்தகைய மாற்றத்தைக் கண்டவுடன்  Duplex Ultra Sound Imaging என்ற பரிசோதனையை செய்து கொண்டு பாதிப்பின் துல்லியத்தை தெரிந்து கொள்ளவேண்டும்.

இதற்கு தற்போது Endovenus Laser Ablation என்ற சத்திர சிகிச்சை அறிமுகமாகியிருக்கிறது. பின்விளைவுகள் குறைவாக இருக்கும் இந்த சிகிச்சை தற்போது நல்லபலன்களை அளித்து வருகிறது.

இத்தகைய சிகிச்சைக்கு பின்னரும்,நோயாளிகள் அதிக நேரம் நிற்பதை த் தவிர்க்க வேண்டும். காலுறை அணியவேண்டியதிருக்கும். உடற்பருமனை குறைக்கவேண்டும். நடை பயிற்சியும், உடற்பயிற்சியும் அவசியம் மேற்கொள்ளவேண்டும். இல்லையெனில் இத்தகைய பாதிப்பு மீண்டும் வரக்கூடும்.