பங்களாதேஷுடனான முதலாவது ஒருநாள் போட்டியின் முடிவில் நியூஸிலாந்து அணியின் அதிரடி ஆட்ட நாயகன் மார்டீன் கப்டீலை அவரது மனைவி லவ்ரா மெக் கோல்ட்ரிக் பேட்டி எடுத்துள்ளார்.

நியூஸிலாந்து அணிக்கு விஜயம் மேற்கொண்டுள்ள பங்களாதேஷ் அணியானது நியூஸிலாந்து அணியுடன் டெஸ்ட் மற்றும் ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி வருகிறது.

இதில் முதலாவதாக இடம்பெறும் ஒருநாள் தொடரின் முதல் போட்டி கடந்த 13 ஆம் திகதி நேப்பியரில் இடம்பெற்றது. இப் போட்டியில் நியூஸிலாந்து அணி 8 விக்கெட்டுக்களினால் வெற்றியீட்டியது. 

போட்டியின் ஆட்டநாயகனாக நியூஸிலாந்து அணி சார்பில் 116 பந்துகளில் 8 நான்கு ஓட்டங்கள் 4 ஆறு ஓட்டங்கள் அடங்களாக 117 ஓட்டங்களை விளாசித் தள்ளிய மார்டீன் கப்டீல் போட்டியின் ஆட்டநாயகனாக தெரிவானார். 

ஆட்டம் முடிந்துபின் கப்டீலை அவருடைய மனைவி லவ்ரா மெக் கோல்ட்ரிக் பேட்டி எடுத்தார்.

பேட்டியில் கப்டீல், பந்துவீச்சாளர்களை பாராட்டினார். முதல் 10 ஓட்டங்களுக்குள் பங்களாதேஷின் 4 விக்கெட்டுகளை கைப்பற்றியது அணிக்கு வெற்றி தேடி தந்ததாக கூறினார். அத்துடன் ரோஷ் டெய்லருடன் இணைந்து ஆடுவது மகிழ்ச்சியளிப்பதாகவும் தெரிவித்தார். "அனைத்து நேரங்களிலும் நானும் டெய்லரும் அதிக நேரம் துடுப்பெடுத்தாட வேண்டும் என்று நினைப்போம் என்றார். 

மார்டீன் கப்டீல், லவ்ரா மெக் கோல்ட்ரிக் இருவரும் கடந்த 2014 ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டனர்.

பங்களாதேஷ் மற்றும் நியூஸிலாந்து அணிக்கிடையிலான இரணடாவது ஒருநாள் போட்டி நாளை இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.