உனக்கு ஆண்களை பிடிக்குமா என  இங்கிலாந்து அணித்தலைவர் ஜோ ரூட்டை பார்த்து கேள்வியெழுப்பியதாக  மேற்கிந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் சனொன் கபிரியல் தெரிவித்துள்ளார்

ஜோ ரூட்டை ஒரினச்சேர்க்கையாளர் என கேலி செய்தார் என்பதற்காக ஐசிசி கபிரியலிற்கு நான்கு போட்டிகளிற்கு தடை விதித்துள்ளது

இந்நிலையில் மூன்றாவது டெஸ்டில் ஆடுகளத்தில் இடம்பெற்ற விடயங்களை மேற்கிந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் கபிரியல் விபரித்துள்ளார்

இங்கிலாந்து அணியின் தலைவரிடம் மன்னிப்பு கோரியுள்ள கபிரியல் இந்த சம்பவம் ஏனைய வீரர்களுடனான தொடர்பாடல்களின் போது கௌரவமாக நடந்துகொள்ளவேண்டியதன் அவசியத்தைஎனக்கும் ஏனைய வீரர்களிற்கும் உணர்த்தியுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்

எனது நண்பர்கள் நலன் விரும்பிகள் இரசிகர்கள் அனைவருக்கும் ஆடுகளத்தில் என்ன நடந்தது என்பதை தெரிவிக்கவேண்டிய கடமை எனக்குள்ளது என கபிரியல் தெரிவித்துள்ளார்

ஆடுகளத்தில் மிகவும் பதட்டமான தருணத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றது என தெரிவித்துள்ள கபிரியல் நான் பந்து வீச தயாரான வேளை இங்கிலாந்து அணியின் தலைவர் என்னையே உற்றுப்பார்;த்துக்கொண்டிருந்தார் இது அனைத்து வீரர்களும் பின்பற்றும் வழமையான உளவியல் தந்திரோபாயம் எனவும் குறிப்பிட்டுள்ளார்

நான் அவ்வேளை ஜோ ரூட்டை பார்த்து நீ ஏன் என்னை பார்த்து சிரிக்கின்றாய் உனக்கு ஆண்களை பிடிக்குமா என கேட்டேன் எனவும் கபிரியல் தெரிவித்துள்ளார்

நான் எனது பதட்டத்தை குறைப்பதற்காகவே அதனை செய்திருக்கவேண்டும் எனவும் தெரிவித்துள்ள மேற்கிந்திய வேகப்பந்து வீச்சாளர் ரூட்  என்னை பார்த்து ஓரினச்சேர்க்கையாளராகயிருப்பதில் தவறில்லை அதனை மற்றையவர்களை அவமதிப்பதற்கு பயன்படுத்தவேண்டாம் என தெரிவித்தார் என்றும் கபிரியல் குறிப்பிட்டுள்ளார்