ஐ.எஸ்.தீவி­ர­வா­திகள் சிரிய அர­சாங்கப் படை­யி­ன­ருக்­காக உளவு பார்த்த குற்­றச்­சாட்டில் இரு­வ­ருக்கு துப்­பாக்­கியால் சுட்டு மர­ண­தண்­டனை நிறை­வேற்றி அவர்­க­ளது உடல்­களை சந்­தி­யொன்றில் சிலு­வையில் கட்டித் தொங்­க­விட்­டுள்­ளனர்.

தீவி­ர­வா­தி­களின் தலை­ந­க­ராக விளங்கும் சிரிய ரக்கா நகரில் இந்த மர­ண­தண்­டனை நிறை­வேற்­றங்கள் இடம்­பெற்­றுள்ளன. அந்த இரு­வரும் செம்­மஞ்சள் நிற ஆடை அணி­விக்­கப்­பட்ட பின்னர் தீவி­ர­ வா­தி­களால் சுட்டுக் கொல்­லப்­பட்­டுள்­ளனர்.

கடந்த வாரத்தில் ஐ.எஸ். தீவி­ர­வா­தி­களால் பல­ருக்கு மர­ண­தண்­டனை நிறை­வேற்­றப்­பட்­டி­ருந்­தது.

 

ஐ.எஸ். தீவி­ர­வா­திகள் பலம் பெற்று விளங்கும் ரக்கா மற்றும் மொசூல் நகர்­க­ளி­லி­ருந்து அவர்­களை பூண்­டோடு ஒழிப்­ப­தாக அமெ­ரிக்க ஜனா­தி­பதி பராக் ஒபாமா சூளு­ரைத்­துள்ள நிலை­யி­லேயே இந்த மர­ண­தண்­டனை நிறை­வேற்­றங்கள் இடம்­பெற்­றுள்­ளன.

பராக் ஒபாமா தனது பதவிக் காலம் பூர்த்­தி­ய­டை­வ­தற்கு சில மாதங்களே உள்ள நிலையில், அக்கால கட்டத்தில் தீவிர வாதிகளை அழிப்பதற்கு முன்னுரிமை கொடுக்கவுள்ளதாக அறிவித்துள்ளார்.