ஈராக் படையினர் மேற்கொண்ட தாக்குதலில் 5 ஐ. எஸ். தீவிரவாதிகள் உயிரிழந்துள்ளதுடன் அவர்கள் பதுங்கியிருந்த 8 குகைகள் அழிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்திவெளியிட்டுள்ளன.

இந்நிலையில், ஈராக்கில் ஆதிக்கம் செலுத்தி வந்த ஐ.எஸ். தீவிரவாதிகள் முற்றிலும் ஒழிக்கப்பட்டு விட்டதாக கடந்த 2017 ஆம் ஆண்டு இறுதியில் அப்போதைய பிரதமர் ஹைதர் அல்-அபாடி அறிவித்தார். 

ஆனால் சமீபகாலமாக அங்கு ஐ.எஸ். அமைப்பு மீண்டும் தலைதூக்க ஆரம்பித்துள்ளது. அவர்களை ஒடுக்க ஈராக் இராணுவ வீரர்கள் தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இந்நிலையில் மொசூல் நகரில் உள்ள குகைகளில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக கிடைத்தத இரகசிய தகவலுக்கமைய அப்பகுதியில் சுற்றி வளைப்பை ஈராக் படையினர் மேற்கொண்டனர்.

இராணுவ வீரர்கள் அந்த பகுதியை சுற்றிவளைத்து அதிரடி தாக்குதல் நடத்தினர். இதில் 5 ஐ.எஸ். தீவிரவாதிகள் உயிரிழந்தனர். இந்நிலையில் மேலும் பயங்கரவாதிகளின் 8 குகைகள் அழிக்கப்பட்டுள்ளதாக ஈராக் இராணுவத்தினர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.