முல்லைத்தீவு மாவட்டத்தில் கடந்த ஆண்டு வெலிஓயா பிரதேசத்தில் 411 பேரும் மல்லாவிப் பிரதேசத்தில் 362 பேரும் சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை தெரிவித்துள்ளது.
முல்லைத்தீவு மாவட்டத்தில் மாந்தை கிழக்கு வெலிஓயா ஆகிய பகுதிகளில் சிறுநீரக நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துக் காணப்படுகின்றது.
இது தொடர்பில் தகவல் அறியும் சட்டம் மூலம் ஊடாக பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் முல்லைத்தீவு மாவட்டத்தில் வெலிஓயா மற்றும் மல்லாவி ஆகிய சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்குட்பட்ட பகுதிகளில் இவ்வாறு சிறுநீரக நோய்த்தாக்கத்திற்கு உள்ளாவோரின் எண்ணிக்கை வருடாந்தம் அதிகரித்துச் செல்கின்றது.
கடந்த 2015 ஆம் ஆண்டு வெலிஓயா பிரதேசத்தில் 251 பேரும் மல்லாவிப்பிரதேசத்தில் 143 பேரும் பாதிக்கப்பட்டிருந்தனர்.
2017 ஆம் ஆண்டில் வெலிஓயாவில் 425 பேரும் மல்லாவிப் பிரதேசத்தில் 224 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
2018 ஆம் ஆண்டு வெலிஓயா பிரதேசத்தில் 411 பேரும் மல்லாவிப் பிரதேசத்தில் 362 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இவ்வாறு கடந்த நான்கு ஆண்டுகளில் இந்த நோயாளர்களின்; எண்ணிக்கை அதிகரித்துச் செலகின்றது.
இந்நிலையில் முல்லைத்தீவு மேற்படி இரண்டு பிரதேசங்களிலும்; சிறுநீரக வைத்தியசாலைகளை அமைப்பதற்கான திட்ட முன்மொழிவுகள் மேற்கொள்ளப்பட்டு வெலிஓயாப்பிரதேசத்திலும் மல்லாவிப்பிரதேசத்திலும் இரண்டு சிறுநீரக வைத்தியசாலைகள் அமைக்கப்பட்டன.
மத்திய அரசினால் மேற்கொள்ளப்பட்ட இவ் அபிவிருத்திப்பணிகளை வெலிஓயா வைத்தியசாலை மக்கள் பயன்பாட்டிற்காக கையளிக்கப்பட்டுள்ளபோதும் மல்லாவி பிரதேசத்தில் அமைக்கப்பட்டுள்ள சிறுநீரக வைத்தியசாலை இதுவரை அதன் கட்டுமானப்பணிகள் நிறைவுறுத்தப்படாமல் காணப்படுகின்றது.
இதனால் இப்பிரதேசத்தில் தற்போது சிறுநீரக்கப் பாதிப்புக்குள்ளாகிய 360 இற்கும் மேற்பட்ட சிறுநீரக நோயாளர்கள் சிகிச்சைகளுக்காக வெளிமாவட்ட வைத்தியசாலைககளுக்கு செல்ல வேண்டிய நிலை காணப்படுகின்றமை இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM