(ப.பன்னீர்செல்வம் – ஆர். ராம்)

நல்லாட்சி அராசங்கம் வாக்குறுதிகளை மட்டும் வழங்கி எம் மக்களை ஏமாற்ற வேண்டாமென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சார்ள் நிர்மலநாதன் சபையில் கோரிக்கை விடுத்தார்.

கட்சித்தலைவர்களிடத்தில் நல்லிணக்கம் ஏற்படுவது மட்டும் நல்லாட்சியல்ல. அதைவிட மக்கள் மத்தியில் நல்லிணக்கம் ஏற்படுத்தப்பட வேண்டுமெனவும் அவர் சபையில் சுட்டிக் காட்டினார்.

பாராளுமன்றத்தில் இன்று வியாழக்கிழமை இடம்பெற்ற மின்சார நெருக்கடி குறித்த சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.