(ஆர்.யசி)

தேசிய அரசாங்கம் அமைப்பதன் நோக்கத்தை ஜனாதிபதியோ ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியோ சரியாக புரிந்துகொள்ளவில்லை. அதுவே தேசிய அரசாங்கத்தின் தோல்விக்கு காரணமாக அமைந்துள்ளது என அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.

ஜனாதிபதியே தேசிய அரசாங்கதின் தலைவராக இருக்கும்போது தேசிய அரசாங்கத்தை நிராகரிப்பது வேடிக்கடியான விடயம் எனவும் அவர் கூறினார். 

தேசிய அரசாங்கம் அமைப்பது குறித்தும், நிகழ்கால அரசியல் நிலைமைகள் குறித்தும் வினவிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.