வவுனியா பண்டாரிகுளம் விபுலானந்தாக் கல்லூரியில்  கல்லூரி முடிவடைந்த பின; வீடு செல்ல முற்பட்ட மாணவனை வெளிநபர் ஒருவர் ஆசிரியர்கள் முன் தாக்கியுள்ள சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

இச்சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது,

பாடசாலை விட்டு வீடு செல்ல முற்பட்ட மாணவனொருவனை அப்பகுதியால் சென்ற ஒருவர் பாடசாலைக்குள் மீண்டும் இழுத்துச்சென்று ஆசிரியர்களுக்கு முன்பாக வைத்து தாக்கியுள்ளார்

இதன் காரணமாக மாணவர்கள் குழப்பமடைந்ததுடன் ஆசிரியர்களும் குறித்த சம்பவத்துக்கு விசனம் தெரிவித்துள்ளனர். 

இந் நிலையில் மாணவனை தாக்கியவருக்கு பாடசாலை சமூகம் தகுந்த தண்டனையை பெற்றுக்கொடுக்க நீதியை நாடவேண்டும் என மாணவர்கள் தெரிவித்துள்ளனர். 

இந் நிலையில் தாக்குதல் நடத்தியவர் பழைய மாணவர் சங்க உறுப்பினர் என்பதும் குறிப்பிடத்தக்கது.