மட்டக்களப்பு வாகரை சின்னதட்டுமுனை பிரதேசத்தில்  சட்ட விரோதமாக உள்ளுர் தயாரிப்பு துப்பாக்கி ( கட்டுத்துவக்கு ) வைத்திருந்த ஒருவரை நேற்று புதன்கிழமை (13) இரவு கைது செய்துள்ளதாக வாகரை பொலிஸார் தெரிவித்தனர் 

பொலிஸாருக்கு கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து குறித்த பிரதேசத்தில் உள்ள வீட்டை சம்பவ தினமான நேற்று நள்ளிரவு பொலிஸார் சுற்றிவளைத்து சோதனையிட்டபோது வீட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த உள்ளூர் தயாரிப்பான துப்பாக்கி (கட்டுத்துவக்கு) வைத்திருந்த 42 வயதுடைய ஒருவரை கைது செய்துள்ளனர் 

இதில் கைது செய்யப்பட்டவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.