யாழ்.சாவகச்சேரி பகுதியில் திடீரென மயங்கி விழுந்தவர் உயிரிழந்துள்ளார்.

 

அல்லாரை வடக்கை சேர்ந்த 56 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளார். 

வீட்டில் இருந்த போது திடீரென நெஞ்சு வலி என கூறி மயங்கி விழுந்துள்ளார். அதனை அடுத்து அவரை உறவினர்கள் மீட்டு சாவகச்சேரி வைத்திய சாலைக்கு கொண்டு சென்றனர். 

வைத்திய சாலையில் அவரை பரிசோதித்த மருத்துவர் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டார் என தெரிவித்தார். அதனையடுத்து உடலம் பிரேத பரிசோதனைக்காக சாவகச்சேரி வைத்திய சாலை பிணவறையில் வைக்கபட்டு உள்ளது.