பெண்களுக்கு எதிரான வன்முறையை இல்லாது ஒழிக்கக் கோரி வல்லமை சமூக மாற்றத்திற்கான இயக்கத்தினர் நடைபவனி ஒன்றினை மேற்கொண்டனர். 

யாழ்.திருநெல்வேலி சந்தை பகுதியில் இன்று வியாழக்கிழமை ஒன்று கூடியவர்கள் பெண்களுக்கு எதிரான வன்முறைகளை இல்லாது ஒழிக்க கோரிய பதாகைகளை  ஏந்தி கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினை முன்னெடுத்தனர். 

அதனை தொடர்ந்து நடைபவனியாக அங்கிருந்து பலாலி வீதியூடாக பரமேஸ்வர சந்தி வரை சென்று, அங்கிருந்து இராமநாதன் வீதியூடாக யாழ்.பல்கலைகழக வாயிலை அடைந்தனர். 

பல்கலைகழக வாயிலிலும் சில நிமிடங்கள் போராட்டத்தினை நடாத்தி போராட்டத்தை முடித்துக்கொண்டனர்.