மகிழ்வான உலகம் பாதுகாப்பான எதிர்காலம் எனும் தலைப்பிலான சிறுவர் விழிப்புணர்வு பேரணியும் பற்சுகாதார பரிசோதனையும் இன்று காத்தான்குடியில் இடம்பெற்றது.
காத்தான்குடி ஹைறாத் வித்தியாலயம் ஏற்பாடு செய்த இந்நிகழ்வு பாடசாலை அதிபர் அஜீரா கலீல்தீன் தலைமையில் இடம்பெற்றது. 
பற்சிகிச்சை நிபுணர் கே.மேகநாதன் மாணவர்களுக்கான பற்சிகிச்சை முகாமை நடாத்தினார்.
பெருமளவிலான மாணவர்கள் கலந்து கொண்ட சிறுவர் விழிப்புணர்வு பேரணியில் பல்வேறு வாசகங்கள் அடங்கிய பதாதைகளை மாணவர்கள் ஏந்தியிருந்தனர்.