(எம்.மனோசித்ரா)

புதிய கூட்டு ஒப்பந்தம் கைசாத்திடப்பட்ட போது அரசாங்கத்தால் பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நிலுவை சம்பளப் பணம் வழங்கப்படும் எனத் தெரிவித்த பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சர், தற்போது நிலுவை சம்பளத்தை யாரும் கேட்கவில்லை அதனை நாம் தறப்போவதுமில்லை எனத் தெரிவித்துள்ளமை கண்டிக்கத்தக்கது என இலங்கை தொழிலாளர் காங்ரஸ் விசனம் தெரிவித்துள்ளது. 

பெருந்தோட்டத் தொழிலாளர்கள் எதைக் கூறினாலும் நம்பிவிடுவார்கள் என்ற எண்ணத்தில் இவர்கள் அந்த மக்களை ஏமாற்ற முற்படுகின்றனர். அரசாங்கத்தின் இந்த எண்ணம் தவறானதாகும். எனவே இது குறித்து கூடிய விரைவில் இலங்கை தொழிலாளர் காங்ரஸ் அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தும் என அதன் உப தலைவர் கணபதி கனகராஜ் தெரிவித்தார். 

பெருந்தோட்டத் தொழிலாளர்பகளுக்கு மாதாந்த சம்பளத்தில் வரவு - செலவு திட்டத்தினூடாக 50 ரூபா மேலதிக கொடுப்பனவு வழங்கப்படும். எனினும் நிலுவை சம்பளம் வழங்கப்பட மாட்டாது என அரசாங்கம் தெரிவித்துள்ளமை குறித்து வினவிய போதே அவர் இதனைத் தெரிவித்தார்.