சட்டவிரோதமான முறையில் வெளிநாட்டுக்கு செல்வதற்காக தங்கியிருந்த 22 பேர் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். 

பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் படி  பொலிஸ் விசேட அதிகாரிகள் மற்றும் இராணுவத்தினர்  மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது சியம்பலாப்பிட்டிய பகுதியில் அமைந்துள்ள  விடுதி ஒன்றில்  சட்டவிரோதமான முறையில் வெளிநாட்டுக்கு செல்வதற்காக தங்கியிருந்த 22 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

குறித்த நபர்களிடமிருந்து இருவாகனங்களை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். 

இந்நிலையில் திஸ்ஸமஹாராம - பன்னேகமுவ பிரதேசத்தைச் சேர்ந்த  ஆட்கடத்தலில் ஈடுபடும் பிரதான சந்தேகநபர்களான இரு முக்கிய சந்தேக நபர்களே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் குறித்த இரு சந்தேகநபர்களும் கைதுசெய்யப்பட்ட நிலையில் நீதவான் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தப்படவுள்ளார். 

குறித்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.