(இராஜதுரை ஹஷான்)

மாகாண சபை தேர்தலை விரைவாக நடத்துமாறு கோரி நாளை முதமல் நாடு தழுவிய ரீதியில் போராட்டங்கள், மற்றும் மக்கள் சந்திப்பினை முன்னெடுகக பொதுஜன முன்னணியினர் தீர்மானித்துள்ளனர். 

அதன்படி நாளை கேகாலை நகரில் முதலாவது போராட்டம் இடம் பெறவுள்ளதாக பொதுஜன பெரமுன அறிவித்துள்ளது.

மாகாண சபை தேர்தலை விரைவாக நடத்துவதற்கு   எதிர்கட்சியினரும், சுதந்திர கட்சியினரும்  சில விடயங்களை விட்டுக் கொடுத்துள்ளோம்.  ஆனால்  ஐக்கிய தேசிய கட்சி மாத்திரம் கடந்த காலங்களில் குறிப்பிட்ட விடயங்களையே இன்றும் குறிப்பிட்டு வருகின்றது . ஆளும் தரப்பினரது பிரதான நோக்கம் ஜனாதிபதி தேர்தலுக்கு பிறகு  மாகாணசபை தேர்தலை நடத்துவதே எனவும் பொதுஜன முன்னணியினர் சுட்டிக்காட்டியுள்ளனர்.