(இராஜதுரை ஹஷான்)

மத்திய வங்கியின் பினைமுறி கொடுக்கல் வாங்கலில் இடம்பெற்ற  பாரிய நிதி மோசடி இடம்பெற்று நான்கு ஆண்டுகள் நிறைவடைந்தள்ள நிலையிலும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின்  சுயாதீனமான அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டும். இதுவரை காலமும் குற்றவாளிகள் தண்டிக்கப்படாமை அரசாங்கத்தின் பலவீனத்தன்மையினை வெளிப்படுத்தியுள்ளது என பாராளுமன்ற உறுப்பினர் ரமேஸ் பத்திரன தெரிவித்தார்.

அத்துடன் பாதாள குழுவின் தலைவன் மாகந்துரே மதூஸின் கைது தொடர்பில் அரசாங்கம் இன்று உரிமை கொண்டாடி கொள்கின்றது. பாதாள குழுவினருடன் தொடர்புடைய பாராளுமன்ற உறுப்பினர்கள் தொடர்பில்  உண்மைகளை அரசாங்கம் உடனடியாக  பகிரங்கப்படுத்தி வேண்டும் எனவும் அவர் இதன்போது தெரிவித்தார்.

பொதுஜன முன்னணியின் தலைமை காரியாலயத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்நிப்பின்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.