(எம்.மனோசித்ரா)

வரவு - செலவு திட்டத்தினூடாக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு ஒரு வருட காலத்திற்கு 50 ரூபா மேலதிக கொடுப்பனவு வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளமையானது, கம்பனிகளை பாதுகாக்கவும் தொழிலாளர்களை ஏமாற்றி போராட்டத்தை கொச்சைப்படுத்தி அதனை முடிவிற்கு கொண்டு வரவும் எடுக்கப்பட்ட கூட்டு சதி முயற்சி என மலையக சிவில் அமைப்புக்களின் ஒன்றியம் கண்டனம் தெரிவித்துள்ளது. 

இது தொடர்பில் அவர்கள் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில்,   தொழில் தருனர்களும் தொழிற்சங்கங்களும் இரகசியமாக செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்த்தத்தில் வெறும் 20 ரூபா அதிகரிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளதை தொழிலாளர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. அதன் காரணமாகவே போராட்டங்கள் தொடர்கின்றது எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.