திருமணம் செய்து கணவரின் வீட்டுக்கு சென்ற 22 வயதான பெண்ணொருவரை முன்னாள் காதலன் கடத்தி சென்றுள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் இருந்து  தகவல்கள் வெளியாகியுள்ளது. 

தான் இல்லாத நேரம் பார்த்து எனது மனைவியின் முன்னாள் காதலன் கடத்திசென்றுள்ளதாக கணவன் சிலாப பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.

சிலாபம்- தாப்பவத்த பகுதியைச் சேர்ந்த 27 வயதான கணவன் சம்பவம் குறித்து தெரிவிக்கையில்,

கடந்த மாதம் 25 ஆம் திகதி ராகமையில் பதிவுத் திருமணம் செய்துகொண்டு அதன் பின்னர் தாப்பவத்த பகுதியில் எனது பெற்றோர்கள் மற்றும் சகோதர்களுடன் நானும் மனைவியும் குடியமர்ந்தோம்.

இந்நிலையில் நான் கடந்த 27 ஆம் திகதி இரவு 7 மணியளவில்  வீட்டுக்கு சென்ற போது மனைவியை காணவில்லையென கணவன் பொலிஸாரிடம் விசாரணையில் தெரிவித்துள்ளார். 

குறித்த பெண்ணை அவரது முன்னாள் காதலன் கடந்த மாதம் 27 ஆம் திகதி கடத்தி சென்று தனது பெற்றோர் வீட்டில் விட்டுச் சென்றதாக 28 ஆம் திகதி குறித்த பெண் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார். 

இந்நிலையில் திருமணமான பெண்ணைக் கடத்திச்சென்ற சந்தேக நபரை கைதுசெய்வதற்காக பொலிஸார்  மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.