பாணத்துறை - இரத்தினபுரி பிரதான வீதியின், இங்கிரிய பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

குறித்த சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் அலுவலகம் வௌியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது. 

வேன் ஒன்று வீதியின் கரையில் சென்றுக்கொண்டிருந்த 50 வயதுடைய பாதசாரி ஒருவர் மீது மோதுண்டமையினால் குறித்த  விபத்து ஏற்பட்டுள்ளது.

குறித்த சம்பவத்தில் காயமடைந்த குறித்த நபர் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டதன் பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

சம்பவத்துடன் தொடர்புடைய சாரதி கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பாக பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.