தமிழகம் கோவையை சேர்ந்த 7 ஆம் வகுப்பு மாணவியை பாலியல் வல்லுறவுக்குட்படுத்திய கர்ப்பமாக்கிய தந்தையை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கோவை பூலுவம்பட்டி அருகே உள்ள வெள்ளிமேடு பகுதியைச் சேர்ந்தவர் ராமலிங்கம், 35 வயதான மனைவி தனியார் பாடசாலையில்  துப்புரவு பணியாளராக பணியாற்றிவருகிறார். 

இவர்களது மகள் அரசு பாடசாலையில் 7 ஆம் வகுப்பு படித்து வருகிறார்.

இந்நிலையில் அந்த மாணவிக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் சிகிச்சைக்காக தனது மகளை அரச வைத்தியசாலைக்கு அழைத்து சென்று ஸ்கேன் செய்து பார்த்ததில் மகள் கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்தனர். 

இதனை அறிந்த தாய் அதிர்ச்சி அடைந்தார். பின் மகளிடம் இது பற்றி கேட்ட போது, தந்தை தான் இதற்கு காரணம் என தெரிவித்து உள்ளார். 

இதனையடுத்து வைத்தியர்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில், பேரூர் அனைத்து மகளிர் பொலிஸார் ராமலிங்கம் மீது  வழக்கு பதிவு செய்து கைது செய்துள்ளனர். 

குறித்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை பேரூர் பொலிஸார் மேற்கொண்டு வருவதாக வெளிநாட்டு தகவல்கள் வெளியாகியுள்ளது.