(ஆர்.யசி)

தோட்டத் தொழிலாளர்களின் அடிப்படை சம்பளத்திற்கு மேலதிகமாக 50 ரூபா கொடுப்பனவை  வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.  

அதற்கமைய தோட்டத்தொழிலாளர்களுக்கு  மாதாந்தம் 800 ரூபாய் அடிப்படை சம்பளமாக ஒரு வருடத்திற்கு மாத்திரம்  வழங்கவும் வரவு செலவு திட்டத்தில் இந்த யோசனை  உள்வாங்கப்படும் எனவும்  பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் நவீன் திசாநாயக தெரிவித்தார்.  

இதற்காக   அரசாங்கம் 1.2 பில்லியன் ரூபாய் நிதியை ஒதுக்கியுள்ளதுடன்,  பிரதமருடனான தனிப்பட்ட பேச்சுவாரத்தை மூலமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

 இலங்கை தேயிலை சபையில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார்.