(ஆர்.யசி)

"சிலோன் டீ" என்ற பெயரில் தயாரிக்கப்படும் இலங்கை தேயிலைக்கு எம்.சி.பி.எல் வர்க்க கிருமிநாசினி பயன்படுத்துவதால்  சர்வதேச சந்தையில் இலங்கை தேயிலையின் தரம் வீழ்ச்சி காணும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகவும் ஆகவே எம்.சி.பி.எல் வர்க்க கிருமிநாசினி பயன்படுத்தும் சகல தேயிலை தொழிற்சாலைகளும் உடனடியாக அதனை கைவிட வேண்டும் இல்லையேல் தொழிற்சாலைகள் இழுத்து மூடப்படும் என பெருந்தோட்டத்துறை அமைச்சர் நவீன் திசாநாயக்க எச்சரிக்கை விடுத்துள்ளார். 

அதேபோல் கிளைபோர்செட் கிருமிநாசினியை தேயிலை,இறப்பர் தோட்டங்களுக்கு மாத்திரம் பயன்படுத்தவும் அரசாங்கம் அங்கீகாரம் கொடுத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். 

இலங்கை தேயிலை சபையில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டார்.