பிரச்சினைகளை எதிர்கொள்ளும் வழிமுறைகளேயே சிந்திக்கின்றேன் - பிரதமர் ரணில்

Published By: R. Kalaichelvan

13 Feb, 2019 | 04:36 PM
image

(நா.தனுஜா)

நான் இன்றைய பிரச்சினைகள் குறித்து சிந்திக்கவில்லை. நாளை ஏற்படப்போகும் பிரச்சினைகள் மற்றும்  அவற்றை எதிர்கொள்வதற்கான வழிமுறைகள் என்பவை தொடர்பிலேயே சிந்திக்கின்றேன் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

அடுத்த 45 வருடங்களில் இந்நாட்டில் வாழப்போகின்றவர்களும் பயன்பெறத்தக்க வகையில் சிந்தித்து நாட்டைக் கட்டியெழுப்ப வேண்டியது அவசியமாகும். 

விஞ்ஞான தொழில்நுட்ப, ஆராய்ச்சி அமைச்சு மற்றும் ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி நிகழ்ச்சியினால் இணைந்து வடிவமைக்கப்பட்ட 'சிட்ரா" சமூக புத்தாக்க ஆய்வுகூடம் நேற்று  கொழும்பு கோல்பேஸ் ஹோட்டலில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவால் உத்தியோகபூர்வமாக அங்குரார்ப்பணம் செய்துவைக்கப்பட்டது. 

அத்தோடு சிட்ராவினால் கடந்த வருடத்திலிருந்தே முன்னெடுக்கப்பட்டு வந்த செயற்பாடுகள் மற்றும் பங்காளித்துவங்களை விளக்கும் “எமது முதலாவது வருட மீளாய்வு" என்ற வருடாந்த அறிக்கையும் வெளியிடப்பட்டது. 

இந்நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்ட பிரதமர் தொடர்ந்தும் கூறுகையில், 

நாட்டில் புதிய முயற்சியாண்மைகளை ஊக்குவிக்கும் வகையிலான 'சிட்ரா"வின் செயற்பாடுகள் கடந்த வருடம் ஆரம்பிக்கப்பட்ட போது அதில் கலந்துகொண்டிருந்த நான், இன்று அதன் பெறுபேறை வெளியிடும் நிகழ்விலும் கலந்துகொண்டிருக்கின்றேன். 

இந்நிலையில் கடந்த காலத்தில் நாங்கள் எதனைச் செய்திருக்கின்றோம் என மீட்டுப்பார்க்க வேண்டும். ஜனநாயக கட்டமைப்புசார் செயற்றிட்டங்கள் மற்றும் அரச உட்கட்டமைப்பு விரிவாக்கம் தொடர்பில் கடந்த காலத்தில் வெகுவாகக் கவனம் செலுத்தப்பட்டிருக்கின்றது. 

எனினும் இது ஓர் கட்டடத்திற்கான அடிப்படையே தவிர, அடுத்தகட்டமாக முன்னெடுக்கப்பட வேண்டிய செயற்பாடுகள் பல உள்ளன. மேலும் நாங்கள் பெற்றுக்கொண்ட கடன்களை எவ்வாறு மீளச்செலுத்துவது என்பது தொடர்பிலும் சிந்திக்க வேண்டியுள்ளது. 

இந்நிலையில் தற்போதைய பாரிய பிரச்சினையாக இருப்பது இயலுமை ஒன்றேயாகும். இவற்றைச் செய்வதற்கான இயலுமை எம்மிடம் உள்ளதா என்ற மீள்பரிசீலனை செய்துகொள்ள வேண்டிய தேவையுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27