சீன அரசாங்கத்தின் அழைப்பினை ஏற்று மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்க,  சீன கமியூனிட்ஸ் கட்சியின் சர்வதேச துறை பொறுப்பாளர் சோ தாவோவை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் சீன கம்யூனிஸ்ட் கட்சியுடனான உறவினை பலப்படுத்தும் நோக்குடன் சீன கமியூனிட்ஸ் கட்சியின் சர்வதேச துறை பொறுப்பாளர் சோ தாவ் என்பவரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

 இந்த சந்திப்பின்  பிரதமர் ரணில் விக்கிரசிங்க தலைமையில் பிரதமரின் பரியார் மைத்திரி விக்கிரமசிங்க , வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர ,வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சர் சஜித் பிரேமதாஸ, போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டீ சில்வா, நீர் வழங்கல் ,வடிகாலமைப்பு மற்றும் நகர திட்டமிடல் அமைச்சர் ரவூப் ஹக்கீம் ,விசேட செயற்திட்ட அமைச்சர் சரத் அமுனுகம மற்றும் சர்வதேச வர்த்தக மற்றும் மூலோபாய அபிவிருத்தி அமைச்சர் மலிக் சமரவிக்கிரம அமைச்சர்கள் உள்ளிட்ட 15 பேர் பங்கேற்றுள்ளனர்.