இன்றைய காலகட்டத்தில் முப்பத்தைந்து வயதைக் கடந்தவர்களுக்கு கூட மாரடைப்பும், இதய பாதிப்பும் வருவது அதிகரித்து விட்டது. இதற்கு காரணம் கொழுப்பு. கொழுப்பு அதிகமாவதால் அத்திரோமா போன்ற இதயத்திற்கு நல்ல இரத்தத்தை எடுத்துச் செல்லும் இரத்த குழாய்களில் அடைப்பு ஏற்படுகிறது. 

அத்துடன் மூளை மற்றும் சிறுநீரகங்களுக்கு செல்லும் இரத்த குழாய்களிலும் அடைப்பு தோற்றுவிக்கின்றன. இதற்கு சிகிச்சை இருக்கிறது என்றாலும் வருமுன் காப்பது நல்லது.

நெய், முட்டை, வெண்ணெய், மாமிசம், மூளை , ஈரல் போன்றவற்றை உணவில் சேர்த்துக் கொள்ளாமல் தவிர்க்கவேண்டும். அதையும் கடந்து அதனை சாப்பிட நேர்ந்தால் கூடுதலான உடலுழைப்பையும், உடற்பயிற்சியையும் செய்து அந்த கொழுப்பினை கரைத்துவிடவேண்டும். இல்லையெனில் இதயத்திற்கு பாதிப்பு ஏற்படும்.

அதே போல் பிஸ்கற்றுகள், வறுத்த ரொட்டி, மின் அடுப்பில் பொரிக்கப்பட்ட பொப்கார்ன், பீட்சா, பர்கர், ப்ரெஞ்ச் ப்ரை, சொக்லெட், ஐஸ்கிறீம் ஆகியவற்றில் கெட்டகொழுப்பு உள்ளது.  Transfat எனப்படும் இந்த கெட்ட கொழுப்புகளாலும் இதய பாதிப்பும், மாரடைப்பும் வரக்கூடும். அதனால் இத்தகைய உணவு வகைகளையும் தவிர்ப்பது நல்லது.

டொக்டர் சிறிதேவி

தொகுப்பு அனுஷா.