புரட்சிகரமான திரவ ஆயுர்வேத வைத்திய சிகிச்சை நிலையலமொன்று அன்மையில் கிரிபத்கொட மாக்கொல வீதியில் திறந்துவைக்கப்பட்டது. 

பாரம்பரிய மூலிகைகளினால் தயாரிக்கப்பட்ட மருந்துகளை நீரில் கலந்து இந்த சிகிச்சை முறை மேற்கொள்ளப்படுகிறது.

Jeevana Ganthera  என்ற பெயரில் இந்த  ஆயுர்வேத  சிகிச்சை நிலையம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்த  ஆயுர்வேத  சிகிச்சை நிலையம் தொடர்பில் அதன் ஸ்தாபகர் அமேஸ் செனவிரத்ன கருத்துத் தெரிவிக்கையில், 

இவ்வாரானதொரு பாரம்பரிய ஆயுர்வேதசிகிச்சை நிலையலமொன்றினை ஆரம்பிக்கவேண்டுமைன்ற அவா நீண்டகாலமாக இருந்தது, அதற்காண முயற்சிகளை கடந்த 10 வருடங்களாக மேற்கொண்டு வந்தேன் அதன் பிரதிபலனே இந்த ஆயுர்வேதசிகிச்சை நிலையம்.

இந்தியாவில் தோன்றிய பண்டைய விஞ்ஞானமான ஆயுர்வேதம் இலங்கையில் பல நூற்றாண்டுகளாக நடைமுறையில் இருந்து வருகின்றது. இலங்கையை பொறுத்தவரையில் சிறந்த மூலிகை வகைகள் காணப்படுகிறது. 9ஆம் நூற்றாண்டில் இருந்தே மருத்துவ சிகிச்சை முறை காணப்படுகிறது.

எனவேதான் நானும் இவ்வாறானதொரு  பாரம்பரிய ஆயுர்வேத சிகிச்சை நிலையலமொன்றினை ஆரம்பிக்கவேண்டுமென்ற விருப்பம் கொண்டேன் .  இந்த   பாரம்பரிய ஆயுர்வேத சிகிச்சை முறையில் ஒரு  முக்கிய அம்சம்தான் மூலிகையிலான மருத்துவ குளியல் இந்த சிகிச்சை முறையினையே நாம் எமது இந்த நிலையத்தில் வழங்குகின்றோம் என்றார்.

இது குறித்து அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

எமது இந்த சிகிச்சை நிலையமானது மனதுக்கு அமைதியை தரும் வகையில் அமைதியான இயற்கை சூழலில் அமைக்கப்பட்டுள்ளது. அத்துடன் அனுபவம் வாய்ந்த  ஆயுர்வேத வைத்தியரின் கண்காணிப்பில் பயிற்றப்பட்ட ஊழியர்கள் குழாமும் சேவையாற்றுகின்றனர்.

=விசேடமாக தயாரிக்கப்பட்ட சிகிச்சையளிக்கும் கருவிகள் ஊடாக உடலுக்கு புத்துணர்வூட்டும் வகையில் வேறு எங்கும் இல்லாத வகையில் விசேட சிகிச்சைகள் வழங்கப்படுகிறது. இந்த  ஆயுர்வேத வைத்திய சிகிச்சைக்காக நாம் பயண்படுத்தும்  கருவிகளை நாமே தயாரித்துள்ளோம். அதற்காண சட்டரீதியான உரிமம் தம்மிடம் மாத்திரமே உள்ளதெனவும் குறிப்பிட்டார்.