ஐக்கிய தேசியக் கட்சியின் பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி பண்டாரவளை நீதிவான் நீதிமன்றில் சரணடைந்துள்ளார்.

பண்டாரவளை தபால் நிலையம் முன்பாக வைத்து, போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் மீது தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டின் சந்தேகத்தின் பேரில் பதுளை மாவட்ட ஐ.தே.க. பாராளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறியைக் கைதுசெய்ய விசேட நடவடிக்கைகளை பண்டாரவளை பொலிஸார் முன்னெடுத்திருந்தனர்.

இந் நிலையிலேயே அவர் இன்று காலை பண்டாரவளை நீதிவான் நீதிமன்றில் சரணடைந்துள்ளார்.