இலங்கை தென்னாபிரிக்க அணிகளிற்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி டேர்பனில் இன்று ஆரம்பமாகவுள்ள நிலையில் இலங்கை அணியின் துடுப்பாட்ட வீரர்களால் ஓட்டங்களை பெறுவதற்கான வழிமுறைகளை கண்டுபிடிக்க முடியும் என அணியின் தலைவர் திமுத் கருணாரட்ண நம்பிக்கை வெளியிட்டுள்ளார்

தென்னாபிரிக்க சூழ்நிலையில் எவ்வாறு துடுப்பெடுத்தாடவேண்டும் என்பது எங்களின் துடுப்பாட்ட வீரர்கள் பலரிற்கு தெரியும் என தெரிவித்துள்ள திமுத் கருணாரட்ன  ஓட்டங்களை பெறுவதற்கான வழிவகைகளை எங்களால் கண்டுபிடிக்க முடியும் எனவும் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

அணித்தலைவர் என்ற அடிப்படையில் நான் அவர்களிற்கு நம்பிக்கையை உருவாக்கமுயன்றுவருகின்றேன் கடந்த முறை நான் எவ்வாறு துடுப்பெடுத்தாடினேன் என்பதை  தெரிவித்து வருகின்றேன் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

நானும் வேறு சிலரும் கடந்த முறை இங்கு விளையாடியுள்ளோம், தென்னாபிரிக்காவில் விளையாடுவதற்கான வழிமுறை குறித்து அவர்களிற்கு தெரியும் எனவும் குறிப்பிட்டுள்ள திமுத் தென்னாபிரிக்க ஆடுகளங்களில் எப்படி விளையாடுவது என இளம் வீரர்களிற்கு கற்றுக்கொடுக்கவேண்டியுள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.

மிகவும் கடினமான ஒரு தருணத்திலேயே தனக்கு அணித்தலைவர் பதவி தரப்பட்டுள்ளது என்பதை திமுத் கருணாரட்ண ஏற்றுக்கொண்டுள்ளார்.

வெளியிலிருந்து பல விடயங்கள் வரும் போது கிரிக்கெட் விளையாடுவது சுலபமல்ல எனவும் அவர்  தெரிவித்துள்ளவர்