முதியோரை முறையாகப் பராமரிக்காமை தொடர்பில் ஒவ்வொரு மாதத்திலும் 50 க்கும் அதிகமான முறைப்பாடுகள் கிடைப்பதாக, முதியோர்களுக்கான தேசிய செயலகம் தெரிவித்துள்ளது.

கடந்த வருடத்தில் இவ்வாறான 500 க்கும் அதிகமான முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக செயலகம் தெரிவித்துள்ளது.

 

குறித்த முறைப்பாடுகள் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து, முதியோரை முறையாகப் பராமரிக்காதவர்களுக்கு எதிராக பராமரிப்பு சபையினூடாக தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக, செயலகத்தின் உரிமையாளர் மேம்படுத்தல் அதிகாரி பிரியான் விஜயகுலசூரிய தெரிவித்துள்ளார்.

பராமரிப்பு நிலையம் தொடர்பிலான போதிய தௌிவின்மையினால் முதியோர் குறித்தப் பிரச்சினை தொடர்பில் விரைவில் தீர்வுகளைப் பெற்றுக்கொள்ள முடியாமல் போயுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.