கல்விப் பொதுத்தராதர சாதாரண, உயர்தர பரீட்சைகள் மாணவர்களுக்கு மேலதிக நெருக்குதல்களை கொடுக்கின்றனவா என்பதை ஆராய்வதற்கு பரீட்சைத் திணைக்களம் குழுவொன்றை நியமிக்கவுள்ளது.

இதற்கான பணிப்புரையை கல்வியமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் பிறப்பித்திறருக்கிறார்.

இலங்கையின் பரீட்சைகள் மாணவர்களுக்கு நெருக்குதல்களை மேலதிகமாக கொடுக்கின்றனவா என்பதை உறுதிப்படுத்திக் கொள்வதற்காக லண்டன் க.பொ.த. சாதாரண உயர்தரப் பரீட்சைகளுடன் ஒப்பீடு செய்வதே இந்த ஆராய்வின் நோக்கமாக இருக்கும்.