இவ்வார அமைச்சரவை முடிவுகள்

Published By: Priyatharshan

07 Apr, 2016 | 02:23 PM
image

அரசாங்க தகவல் திணைக்கள கேட்போர் கூடத்தில் இன்று இடம்பெற்ற வாராந்த அமைச்சரவை முவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் சுகாதார அமைச்சரும் அமைச்சரவைப் பேச்சாளருமான ராஜித்த சேனாரத்ன கலந்துகொண்டு அமைச்சரவை முடிவுகளை வெளியிட்டார்.

அமைச்சரவை முடிவுகள் வருமாறு,

01. சுற்றுலாத்துறையில் புரிந்துணர்வை ஏற்படுத்திக் கொள்வது தொடர்பில் இலங்கை மற்றும் சீன மக்கள் குடியரசு ஆகிய நாடுகளுக்கிடையில் இருதரப்பு ஒப்பந்தம் ஒன்றில் கைச்சாத்திடல் (விடய இல 12)

பொருளாதார ஒத்துழைப்பு தொடர்பான இலங்கை – சீன ஒன்றிணைந்த குழுவின் 07 ஆவது கூட்டத்தில் முன்வைக்கப்பட்ட யோசனைகளின் படி, இலங்கை மற்றும் சீன மக்கள் குடியரசுக்குமிடையில் சுற்றுலாத்துறையில் ஒத்துழைப்பு தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தமொன்று பிரதமர் ரணில் விக்ரமசிங்கவினால் சீன விஜயத்தின் போது கைச்சாத்திடுவது தொடர்பில் சுற்றுலாத்துறை அபிவிருத்தி மற்றும் கிறிஸ்தவ மத விவகார அமைச்சர் ஜோன் அமரதுங்கவினால் முன்வைக்கப்பட்ட அமைச்சரவை யோசனைக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.   

02. தேசிய புத்தாக்குனர்கள் தினம் ஒன்றினை பிரகடனம் செய்தல்   (விடய இல. 15)

ஒரு நாடானது, இடைநிலை மட்ட வருமான பொறியினைக்கடந்து அந்த இடைநிலை வருமான மட்டத்திலிருந்து உயர் வருமானத்தை பெறக்கூடிய மட்டத்திற்கு விருத்தியாகும். அக்காலப்பகுதியின் போது புதிய கண்டுபிடிப்புக்களாவன ஒரு பிரதான பங்களிப்பனை வழங்குகின்றன என நம்பப்படுகின்றது. 

ஆதலினால் ஒரு நாட்டின் பொருளாதாரமானது அதன் அடுத்த கட்டத்தை அடைவதற்கு உறுத்துணையாக இருக்கின்ற புத்தாக்கங்களை படைக்கும் புத்தாக்குனர்களுக்குத் தேவையான சகல வசதிகளையும் ஊக்குவிப்புக்களையும் வழங்க வேண்டியது அந்நாட்டிற்குரிய பணிப்பாணையாகும். எனவே இவற்றினை கவனத்திற் கொண்டு மிக புகழ்பெற்ற விஞ்ஞானி புத்தாக்குனர் மற்றும் புத்தாக்குனர் ஆணைக்குழுவின் முதலாவது ஆணையாளர் மற்றும் பல எந்திரவியல் அமைப்பாய்மையின் தோற்றுனரான தேசபந்து கலாநிதி ஏ.எஸ்.எஸ். குலதுங்கவினால் பிறந்த தினமான ஒக்டோபர் மாதம் 26ஆம் திகதியினை தேசிய புத்தாக்குனர் தினமாக பிரகடனப்படுத்த விஞ்ஞான தொழில்நுட்பவியல் மற்றும் ஆராய்ச்சி அமைச்சர்  சுசில் பிரேமஜயந்தவினால்  முன்வைக்கப்பட்ட  அமைச்சரவை பத்திரத்திற்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. 

03. சோல பேனல் முன்மாதிரி தயாரிப்பு வசதிகளை பெற்றுக் கொடுக்கும் தொழில்நுட்ப மற்றும் ஆராய்ச்சி கல்வி பயிற்சித்திட்டம்  (விடய இல. 08)

2020ம் ஆண்டளவில் இந்நாட்டின் முழு மன் உற்பத்தியில் 20 சதவீதத்தினை சம்பிரதாய மின்னுற்பத்தி முறைக்கு புறம்பான முறையில் பெற்றுக் கொள்வதே அரசாங்கத்தின் இலக்காகும். இதனடிப்படையில் துரிதமாக விருத்தி அடைந்து வரும் சூரியசக்தி மின் உற்பத்தி மற்றும் அதனுடன் தொடர்பான தொழில்துறைக்காக உதவிபுரியும் நோக்கில் பல்கலைக்கழக பட்டதாரிகள், தொழில் பயிற்சி நிலையங்களில் பயிற்சி பெற்றோர், இராணுவ சேவையில் கடமையாற்றிய அதிகாரிகள், க.பொ.த உயர்தரத்துக்கு தகுதி பெற்ற பாடசாலை கல்வியினை முடித்துக் கொண்ட மாணவர்கள் உள்ளடங்கிய சுமார் 2000 பேருக்கு சோல பேனல் உற்பத்தி மற்றும் அதனை இணைத்தல், அது தொடர்பான ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி காரணிகள் மற்றும் சூரிய சக்தி மின்னுற்பத்தி நிலையமொன்றின்  சேவையினை பெற்றுக் கொடுத்தல் போன்றவை தொடர்பில் உயர் பிரயோக பயற்சி ஒன்றை பெற்றுக் கொடுப்பதற்காக வேண்டி ஐக்கிய அமெரிக்க குடியரசின் இலனொய் பல்கலைகழகம் மற்றும் சிவனந்தன் ஆய்வுகூடம் நிர்வனத்தின் விஷேட ஆலோசனைகள் மற்றும் வழிகாட்டல்களை பெற்றுக் கொள்வதற்காக புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றில் கைச்சாத்திடவும், பேராதெனிய, யாழ்ப்பாணம், தென் மற்றும் களனிய பல்கலைக்கழகங்களில் குறித்த ஆராய்ச்சி மற்றும் பயிற்சி வசதிகளை ஸ்தாபிப்பதற்கும் விஞ்ஞான தொழில்நுட்பவியல் மற்றும் ஆராய்ச்சி அமைச்சர் சுசில் பிரேமஜயந்தவினால் முன்வைக்கப்பட்ட அமைச்சரவை பத்திரத்திற்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

04. சீன அபிவிருத்தி வங்கியினால் நிதியளிக்கப்படும் முன்னுரிமை வீதிகள் கருத்திட்டம் 3 – 11 வீதிகளை பிரதியீடு செய்தல்  (விடய இல. 31)

சீன அபிவிருத்தி வங்கியினால் நிதியளிக்கப்படும் முன்னுரிமை வீதிகள் கருத்திட்டம் 3 – 11 கீழ், மத்திய மற்றும் சபரகமுவ மாகாணங்களிலுள்ள 128.85 கி.மீ. நீளமான 20 மாற்று வீதிகளை பிரதியிடுவதற்கு உயர் கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர்  லக்ஷ்மன் கிரியெல்லவினால் முன்வைக்கப்பட்ட அமைச்சரவை பத்திரத்திற்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

05. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் விவசாய பீடத்தில் ஆய்வு மற்றும் பயிற்சித் தொகுதியைத் தாபிப்பதற்கான கருத்திட்டம்   (விடய இல. 38)

யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தில் ஆய்வு மற்றும் பயிற்சித் தொகுதியை நிர்மாணிப்பதற்காக ஜப்பான் சர்வதேச கூட்டுறவு நிறுவனத்தினூடாக (ஜய்கா) ஜப்பான் யென் 1,667,000,000 (அண்ணளவாக 2,100 மில்லியன் ரூபா) மானிய உதவியை வழங்குவதற்கு ஜப்பான் அரசாங்கம் உடன்பட்டுள்ளது. 

இந்தக் கருத்திட்டத்தின் பிரதான நோக்கம் பயனுள்ள விதத்தில் வட மாகாணங்களிலுள்ள உலர் வலய விவசாயங்களில் ஆய்வுகள், கல்வி மற்றும் மேம்பாட்டு நடவடிக்கைகள் என்பவற்றை மேம்படுத்துவதாகும். மேலும், விலங்கு விஞ்ஞானம், பயிர் விஞ்ஞானம், விவசாய இரசாயனவியல், விவசாய உயிரியல், விவசாய எந்திரவியல் மற்றும் விவசாயப் பொருளியல் போன்ற பாரிய விவசாயத் துறைகளில் எதிர்காலத்தில் ஏற்படும் கேள்விகளை எதிர்கொள்ளும் பொருட்டு பல விசேட துறைகளை அதிகரிப்பதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது. 

எனவே விடயம் தொடர்பில் ஜப்பான் சர்வதேச கூட்டுறவு நிறுவனத்துடன்  (ஜய்கா) மானிய உடன்படிக்கை ஒன்றைச் செய்து கொள்வதற்கு தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார விவகாரங்கள் அமைச்சர் எனும் ரீதியில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

06. முதலீடு, பொருளாதார மற்றும் தொழில்நுட்பம் தொடர்பான ஒப்பந்தத்தை விரிவான முறையில் செயல்படுத்த சீன மக்கள் குடியரசின் வணிக அமைச்சுக்கும், இலங்கை ஜனநாயக சோஷலிச குடியரசின் அபிவிருத்தி உபாய முறைகள் மற்றும் சர்வதேச வர்த்தக என்பவற்றுக்கிடையில் ஏற்படுத்திக் கொள்ளப்படும் புரிந்துணர்வு ஒப்பந்தம்  (விடய இல. 39)

முதலீடு, பொருளாதார மற்றும் தொழில்நுட்பம் தொடர்பான ஒப்பந்தத்தை விரிவான முறையில் செயல்படுத்த சீன மக்கள் குடியரசின் வணிக அமைச்சுக்கும், இலங்கை ஜனநாயக சோஷலிச குடியரசின் அபிவிருத்தி உபாய முறைகள் மற்றும் சர்வதேச வர்த்தக அமைச்சு என்பவற்றுக்கிடையில் ஏற்படுத்திக் கொள்ளப்படும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் பிரதமரின் சீன விஜயத்தின் போது கைச்சாத்திட அபிவிருத்தி உபாய முறைகள் மற்றும் சர்வதேச வர்த்தக அமைச்சர் மலிக் சமரவிக்ரமவினால் முன்வைக்கப்பட்ட அமைச்சரவை பத்திரத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

07. மாநகர, மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சின் கீழ் அமுல் செய்யப்படுகின்ற கொழும்பு மாநகர் சார்ந்த நகர அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் அமுல் செய்யப்படுகின்ற அபிவிருத்திப் பணிகளுக்காக காணிகளை எடுத்துக் கொள்ளும் போது பாதிக்கப்படுகின்ற தரப்பினருக்கு நட்டஈடு வழங்குதல்   (விடய இல. 40)

கொழும்பு மாநகரையும், மாநகரைச் சூழவுள்ள பிரதேசங்களையும் வெள்ளப் பெருக்கினால் ஏற்படக் கூடிய பாதிப்புகளிலிருந்து பாதுகாத்தல், உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தல், தாபன அபிவிருத்தி முதலான நோக்கங்களை பிரதானமாகக் கொண்டு கொழும்பு மாநகர் சார்ந்த நகர அபிவிருத்தி கருத்திட்டத்தின் கீழ் 56 உப கருத்திட்டங்கள் அமுல் செய்யப்படுகின்றன. 

இதன் கீழ் உத்தேச பெரும்பாலான கருத்திட்டங்களுக்குரிய நிர்மாணப் பணிகளும் பழுதுபார்ப்புப் பணிகளும், மக்கள் கூடுதலாக ஒன்றாக வசிக்கும் பிரதான நகரங்களுடாகவும், சன நெரிசல் மிக்க பிரதேசங்களுடாகவும் இடம்பெறவுள்ளன. என்பதுடன், உத்தேச அபிவிருத்திப் பணிகளுக்கு தனியார் காணிகளை எடுத்துக் கொள்வதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது. இது போன்ற கருத்திட்டங்களுக்கு காணிகளை எடுத்துக் கொள்ளும் போது பாதிக்கப்படுகின்ற தரப்பினர்கள் சார்பில் நட்டஈடு செலுத்துவதற்காக கடைப்பிடிக்க வேண்டிய ஒழுங்கு விதிகள் உள்ளடங்கிய 2014.05.30 ஆம் திகதிய 1864/54 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்ட காணி எடுத்துக் கொள்ளல் ஒழுங்குவிதிகளுக்கு அமைய செயற்படுத்த நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க மற்றும் மாநகர, மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க ஆகியோர் இணைந்து முன்வைத்த அமைச்சரவை பத்திரத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

08. பௌத்த புனரோதய நிதியமொன்றை நிறுவுதல் (விடய இல. 41)

தேரவாத பௌத்த தர்மம் தொடர்ந்தும் உயிரோட்டத்துடனுள்ள  ரீதியில் இலங்கையில் 12,150 அளவான பௌத்த விகாரைகள் உள்ளதுடன், அவற்றில் சுமார் 750 பிரிவெனாக்களும் நடாத்தப்படுகின்றன. சுமார் 150 அளவிலான வன ஆரண்ய சேனாக்களும் நாடு பூராகவும் பரந்துள்ளன. இருந்த போதிலும் விகாரைகள், பிரிவெனாக்களைச் சார்ந்துள்ள பிரச்சினைகள் காரணமாக விகாரையில் வசிக்கும் பிக்குமார்கள் சிரமங்களுக்குக் முகங்கொடுப்பதாகவும், அதன்மூலம் அந்த புனிதமான நிறுவனங்களால் வழங்கப்படும் மத, பண்பாட்டு மற்றும் கல்விச் சேவைகளுக்குப் பாதகமான தாக்கம் ஏற்பட்டுள்ளது. 

விகாரைகள் மற்றும் பிரிவெனாக்களின் தேவைகளைப் பூர்த்திசெய்து, அது சார்ந்துள்ள பௌதீக கட்டுமானங்களைப் பராமரிப்பதற்கு பௌத்த சாசன அமைச்சு, பௌத்த அலுவல்கள் திணைக்களம் மற்றம் கல்வி அமைச்சு ஆகியவை குறிப்பிடத்தக்களவு பங்களிப்பைச் செய்த போதிலும் அவை வருடாந்த வரவு செலவுத்திட்ட மதிப்பீடுகளின் கீழ் மட்டுப்படுத்தப்படுகின்றன. 

எனவே குறித்த பிரச்சினைகளை கட்டுப்படுத்த அரசாங்கத்தினால் வழங்கப்படும் பங்களிப்புக்கு மேலதிகமாக பல்வேறு வருமானங்கள் மற்றும் அன்பளிப்புக்களை பயன்படுத்தி விதிமுறையாக பயன்படுத்தும் பொருட்டு “பௌத்த புனரோதய நிதியம்” எனும் பெயரிலான நிதியமொன்றை அமைத்து அதன் பொதுவான கொள்கையொன்றின் கீழ் பௌத்த ஸ்தானங்களை இனங்கண்டு அவற்றுக்கு நிதிவசதி அளிப்பதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

09. உணவு உற்பத்தி தேசிய நிகழ்ச்சித் திட்டத்திற்கு (2016 – 2018) உரியதாக 2016 ஆண்டில் செயற்படுத்தப்படும் நிகழ்ச்சித்திட்டம்  (விடய இல. 42)

உணவு உற்பத்தி தேசிய நிகழ்ச்சித் திட்டத்திற்கு (2016 – 2018) உரியதாக 2016 ஆண்டில் செயற்படுத்தப்படும் நிகழ்ச்சித்திட்டத்தை துரிதபடுத்துவதற்காக பல செயற்திட்டங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. 2016 ஆண்டில் சிறுபோகத்தின் போது உப உணவு உற்பத்திக்குத் தேவையான விதைகள் மற்றும் நடுகைப் பொருட்களைப் இலவசமாக வழங்குதல், உணவு உற்பத்தி தேசிய நிகழ்ச்சித் திட்டத்திற்கு இணையாக “நச்சுத் தன்மை அற்ற கமத்தொழிலை” மேம்படுத்த தேவையான விதைகளை இலவசமாக வழங்குவதற்கும், இம்முழு மொத்த நிகழ்ச்சித்திட்டம் தொடர்பான கண்காணிப்பு, தொடராய்வு மற்றும் முன்னேற்ற மீளாய்வினை மாகாண மற்றும் பிரதேச மட்டத்தில் நடாத்துதல் போன்ற செயற்றிட்டங்களை முன்னெடுப்பது தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.  

10. இலங்கை மத்திய வங்கிக்கும் சீன அபிவிருத்தி வங்கிக்கும் இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றை ஏற்படுத்திக் கொள்ளல் (விடய இல. 43)

உள்நாட்டு நிதியியல் அமைப்பு உறுதிப்பாட்டையும் உள்நாட்டு நாணய ஸ்திரத்தன்மையைப் பாதுகாப்பதற்கும் அத்துடன் இலங்கை ரூபாவின் பன்னாட்டு ஸ்திரத்தன்மையை பேணுவதற்கும் இலங்கை மத்திய வங்கிக்கு நிதியியல் ஒத்துழைப்பை சீன குடியரசிலுள்ள வர்த்தக வங்கியான சீன அபிவிருத்தி வங்கி வழங்குவதற்கு இலங்கை மத்திய வங்கிக்கும் சீன அபிவிருத்தி வங்கிக்கும் இடையே விரிவான புரிந்துணர்வு ஒப்பந்தத்தினை பிரதமர் ரணில் விக்ரமசிங்கவினால் சீன விஜயத்தின் போது மேற் கொள்வதற்கு தேசியக் கொள்கைகள் மற்றும் பொருளாதார விவகாரங்கள் அமைச்சர் எனும் ரீதியில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவினால் முன்வைக்கப்பட்ட அமைச்சரவை யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

11. அரசுக்குச் சொந்தமான நிறுவனங்களிற்கான தலைவர்கள், மற்றும் பணிப்பாளர்கள் சபைகளுக்கான நியமனங்களை மேற்கொள்ளும் போது பரிசீலனைக்கு எடுத்துச் கொள்ளவேண்டிய நிபந்தனைகள் (விடய இல. 44)

இலங்கையின் பொது நிறுவனங்களின் மிகப் பாதகமான முன்னேற்ற நிலையைத் தோற்றுவித்தமைக்குப் பல காரணங்கள் ஏதுவாக இருந்த போதும், பொது நிறுவனங்களின் முகாமை தொடர்பாக குறித்த தெளிவான கொள்கை வழிகாட்டல்கள் இன்மை மிக முக்கிய காரணமாக கொள்ளப்படுகின்றது. 

அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனத்தின் படி பொது நிறுவனங்களின் செயற்பாடுகளை மற்றும் அவற்றை சந்தைப்படுத்தும் வகையில் சொத்துக்களாக மாற்றுதற் பொருட்டு பொது நிறுவனங்களின் தொழிற்பாடுகளை ஒருமுகப்படுத்தும் வகையில் வைத்திருக்கும் நிறுவனம் ஒன்றை உருவாக்கி, சிறந்த நடைமுறைகளைப் பின்பற்றி தகுதிவாய்ந்த நிர்வாக உயர் அதிகாரிகளை தெரிவு செய்யும் ஒரு செயன்முறையை ஆரம்பிப்பது காலத்தின் தேவையாகும். 

குறித்த நிர்வன உயர் அதிகாரிகளை நியமிக்கும் போது முன்வைக்கப்படும் பெயர்ப்பட்டியலின் தகுதிகளை பரிசீலனை செய்து சிபார்சு செய்வதற்கு விசேட குழுவொன்று ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டுள்ளது. குறித்த  குழுவினால் முன்வைக்கப்பட்டுள்ள ஒழுங்கு விதிகளை அடிப்படையாக வைத்து ஒரு வழிகாட்டியை அமைத்து பயன்படுத்துவதற்கு தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார விவகாரங்கள் அமைச்சர் எனும் ரீதியில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

12. காலநிலை மாற்றங்கள் தொடர்பான பரிஸ் உடன்படிக்கையில் கைச்சாத்திடல் (விடய இல. 45)

காலநிலை மாற்றங்கள் தொடர்பான பரிஸ் உடன்படிக்கையில் கைச்சாத்திடும் விழா ஏப்ரல் மாதம் 22ம் திகதி நிவூயோர்க் நகரில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் சபை தலைமையகத்தில் இடம்பெறவுள்ளது. 

அதற்கு சமமாக உலக போதைப்பொருள் பிரச்சினை தொடர்பிலான ஐக்கிய நாடுகளின் மாநாடு, வினைத்திறனான அபிவிருத்தி இலக்குகளை அடைவதற்கென உயர் மட்ட தலைப்பிலான விவாதம் ஆகியவையும் அங்கு இடம்பெறவுள்ளன. 

குறித்த பரிஸ் உடன்படிக்கையில் கைச்சாதிடுவதற்கும், ஏனைய நிகழ்வுகளில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் கலந்து கொள்வதற்கு விஞ்ஞான, தொழில்நுட்ப மற்றும் ஆய்வு அமைச்சர் கௌரவ சுசில் பிரேமஜயந்த அவர்களுக்கு அதிகாரத்தை வழங்க மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் அமைச்சர் எனும் ரீதியில் ஜனாதிபதி மைத்திரிபால 

சிறிசேன வினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04