விற்பனை நிலையத்தில் திடீர் தீ பரவல் ; பல இலட்சம் ரூபா பெறுமதியான மின் சாதனப்பொருட்கள் தீக்கிரை

Published By: Vishnu

13 Feb, 2019 | 07:56 AM
image

மன்னார் பஸார் பகுதியில் அமைந்துள்ள விற்பனை நிலையமொன்னிறல் நேற்றிரவு ஏற்பட்ட தீ விபத்து காரணமாக குறித்த விற்பனை நிலையத்தில் பல இலட்சம் ரூபா பெறுமதியான மின் சாதனப்பொருட்கள் எறிந்து நாசமாகியுள்ளது.

குறித்த விற்பனை நிலையம் வழமை போல் நேற்றரவு இரவு மூடப்பட்டுள்ளது. எனினும் இரவு 9 மணியளவில் மேற்படி விற்பனை நிலையத்தினுள் திடீர் என தீப்பரவல் ஏற்பட்ட நிலையில்,அ ருகில் உள்ள வர்த்தகர்களும், மக்களும் இணைந்து தீயை கட்டுப்படுத்த நடவடிக்கைகளை மேற்கொண்டதோடு ,மன்னார் பொலிஸாருக்கும் தகவல் வழங்கினர்.

மன்னார் பொலிஸார் சம்பவ இடத்திற்கு வந்ததோடு,மக்களை குறித்த பகுதிக்குள் செல்ல அனுமதிக்கப்படவில்லை.எனினும் நீண்ட நேரமாகியும் தீயை கட்டுப்படுத்த பொலிஸார் நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை.

வர்த்தகர்களும்,மக்களும் இணைந்து தீ ஏற்பட்ட விற்பனை நிலையத்தின் பின் பகுதியில் இருந்து பௌசர் மூலம் கொண்டு வரப்பட்ட நீரை பயன்படுத்தி தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முயற்சித்தனர்.

இதன்போது சம்பவ இடத்திற்கு மன்னார் நகர முதல்வர் ஞ.அன்ரனி டேவிட்சன்,வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான சாள்ஸ் நிர்மலநாதன், செல்வம் அடைக்கலநாதன் ஆகியோர் வருகை தந்தனர்.

இதையடுத்து வவுனியா தீ அனைப்பு பிரிவினருக்கு தகவல் வழங்கப்பட்ட நிலையில் இரவு 10.30 மணியளவில் வவுனியாவில் இருந்து மன்னாருக்கு வருகை தந்து தீயை கட்டுப்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது.

நீண்ட நேரத்தின் பின் குறித்த தீ இரவு 11.45 மணியளவில் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டது.

குறித்த தீ பரவலின் காரணமாக விற்பனை நிலையத்தில் உள்ள பல இலட்சம் ரூபாய் பெறுமதியான புதிய மற்றும் பழைய மின் சாதனப்பொருட்கள் தீயில் எறிந்து சாம்பளாகியுள்ளது.

இந் நிலையில் தீப்பரவலானது மின் ஒழுக்கின் காரணமாக ஏற்பட்டதா அல்லது திட்டமிட்ட நாசகாரிய செயலா? என்பது தொடர்பில் விசாரனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

“ஜனநாயகம் ஆபத்தில்; நீதித்துறையைப் பாதுகாக்க அனைவரும்...

2026-07-19 21:40:52
news-image

நாளை முதல் முட்டைகளின் விலை அதிகரிப்பு:...

2026-07-19 21:42:08
news-image

உண்மையான தலைமைத்துவம் என்பது பதவிகளோ அல்லது...

2026-07-19 20:31:38
news-image

மட்டக்களப்பில் விற்பனைக்கு உள்ள மோட்டார் சைக்கிளை...

2026-07-19 20:19:28
news-image

அனுமதிப் பத்திரமின்றி 1000 பஸ்கள் சேவையில்...

2026-07-19 15:59:20
news-image

ஒக்டோபர் 8 முதல் துவாய்கள், நெப்கின்களுக்கு...

2026-07-19 19:50:35
news-image

டெங்கு காய்ச்சலால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 50...

2026-07-19 18:52:55
news-image

விற்பனைக்கான மோட்டார் சைக்கிள்களை ஓடிப்பார்ப்பதாகக் கூறி...

2026-07-19 17:54:15
news-image

நீதியரசர்களின் பதவிக்கால நீட்டிப்பு முயற்சியை கைவிட...

2026-07-19 17:44:06
news-image

நாட்டுக்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின்...

2026-07-19 17:32:33
news-image

18 கிலோகிராமுக்கும் அதிகளவான ஐஸ் போதைப்பொருளுடன்...

2026-07-19 17:29:40
news-image

தெஹிவளை - கல்கிஸ்ஸை பொது மயானத்தில்...

2026-07-19 17:25:55