டிஜிட்டல் பொழுதுபோக்கு விநோத செயற்பாடுகளின் ஆர்வலர்களால் வலுவூட்டப்படும் நாட்டின் புகழ்பெற்ற வீடியோ கேம் சமூகமான Gamer.LK இனால் பல்கலைக்கழகங்களுக்கிடையிலான முதலாவது eSports போட்டித்தொடர் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதற்கு டயலொக் பல்கலைக்கழக eSports சம்பியன்ஷிப் எனப் பெயரிடப்பட்டுள்ளது.
இலங்கையின் முன்னணி தொலைத்தொடர்பாடல்கள் மற்றும் புரோட்பான்ட் சேவைகளை வழங்கும் டயலொக், இந்நிகழ்வுக்கு பிரதான அனுசரணையை வழங்குகிறது.
இலங்கையின் பரந்த மற்றும் வேகமான இணைய இணைப்புகளை மொபைல் 4G மற்றும் ஹோம் புரோட்பான்ட் இணைப்புகளின் மூலமாக வழங்குகிறது. ஒன்றுமேற்பட்ட விளையாட்டு ஆர்வலர்களுக்கான சிறந்த ஒன்லைன் கட்டமைப்பை டயலொக் வழங்குகிறது.
gamer.lk உடன் இணைந்து உடழரன cloud gaming server களையும் டயலொக் செயற்படுத்தியுள்ளது. நாட்டின் சிறந்த சாதாரண மற்றும் போட்டிகரமான கேமர்களை தரப்படுத்தும் வகையில் இலங்கையின் கேமர் தரப்படுத்தலையும் டயலொக் அறிமுகம் செய்துள்ளது.
கடந்த ஆண்டு இலங்கை சைபர் கேம்ஸ் தேசிய சம்பியன்ஷிப் போட்டிகள் வெற்றிகரமாக நிறைவேறியதைத் தொடர்ந்து, இந்த துறையின் வளர்ச்சியை கௌரவித்து, இலங்கையின் அனைத்து பல்கலைக்கழக மாணவர்களையும் இந்த அறிமுக போட்டித் தொடரில் பங்குபற்ற வருமாறு Gamer.LK அழைப்புவிடுக்கிறது.
eSports போட்டித்தொடர் ஏற்பாடு தொடர்பில் Gamer.LK இன் பிரதம நிறைவேற்று அதிகாரி ரவீன் விஜேதிலக கருத்து தெரிவிக்கையில்,
“வருடா வருடம் இலங்கையில் eSports நிகழ்ச்சிகள் பிரபல்யமடைந்து வரும் நிலையில், Gamer.LK ஐச் சேர்ந்த நாம் பல்கலைக்கழகங்கள் மட்டத்தில் eSports களை கொண்டு செல்வதற்காக டயலொக் பல்கலைக்கழக eSports சம்பியன்ஷிப் போட்டி எனும் பெயரில் முன்னெடுக்கப்படுகின்றன. தேசிய மட்டத்தில் போட்டிகரத்தன்மையையும் ஆர்வத்தையும் அதிகரிக்க நாம் எதிர்பார்ப்பதுடன், இலங்கையின் பல்கலைக்கழகங்கள் மத்தியில் இந்த போட்டிகளை பிரபல்யப்படுத்தவும் திட்டமிட்டுள்ளோம்” என்றார்.
2016 ஏப்ரல் 23 மற்றும் 24 ஆம் திகதிகளில் கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த மாநாட்டு மண்டபத்தில் நடைபெற ஏற்பாடாகியுள்ளதுடன், நொக்அவுட் முறையில் இந்த போட்டிகள் நடைபெறும். நாட்டின் முதலாவது உத்தியோகப்பற்றற்ற தேசிய பல்கலைக்கழகங்களுக்கிடையிலான eSports சம்பியன்ஷிப் போட்டிகளாக ஏற்பாட்டாளர்களின் மூலம் அழைக்கப்படும் இந்நிகழ்வு, கேமிங் அனுபவத்துக்கு பெறுமதியை சேர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அத்துடன், மாணவர் சமூகத்தில் eSports நேர்த்தியான தாக்கத்தை ஏற்படுத்தும் எனவும் கருதப்படுகிறது.
ஓவ்வொரு போட்டியிலும் வெற்றியீட்டுபவருக்கு புள்ளிகள் வழங்கப்படும். இந்த போட்டிகளில், Call of Duty 4, DOTA 2, FIFA 16, Mortal Kombat X, Need for Speed மற்றும் மொபைல் கேம்கள் போன்றன அடங்கியுள்ளன.
ஒவ்வொரு போட்டி வகைக்கும் பதக்கங்கள் வழங்கப்படும் என்பதுடன், அதிகளவு புள்ளிகளைப்ஃபதக்கங்களைப் பெறும் பல்கலைக்கழகத்துக்கு மாபெரும் பல்கலைக்கழக eSports சம்பியன்ஷிப் கோப்பை வழங்கப்படும்.
கேம் டிவலப்பர்களுக்காக அல்லது கேமிங்கில் ஆர்வம் கொண்டுள்ளவர்களுக்கு அறிவூட்டும் பயிற்சிப்பட்டறை ஒன்றும் ஏப்ரல் 23ஆம் திகதி முன்னெடுக்கப்படவுள்ளது. பல்கலைக்கழகங்களில் கணினி விஞ்ஞானம், கேம் டிசைன் மற்றும் டிவலப்மன்ட் கற்கைகளை பயில்வோருக்கு பெரிதும் பயனுள்ளதாக அமைந்திருக்கும்.
eSports க்கு மேலதிகமாக, இலங்கையின் முன்னணி comic கலைஞர்களுடன் சந்திப்பொன்றையும் மேற்கொள்ள PRUVE உடன் இணைந்து வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கவுள்ளது. சகல comic ரசிகர்களுக்கும், cosplayers மற்றும் geeks ஆகியோருக்கு கடந்த ஆண்டின் கேம்ஸ் கொண்டாட்டத்தைத் தொடர்ந்து பெருமளவு அனுபவத்தை பெற்றுக் கொள்ளக்கூடியதாக இருக்கும்.
இதில் Cosplay போட்டியும் உள்ளடங்கியிருக்கும். Cosplayer கள் தமக்கு விரும்பிய கதாபாத்திரங்களில் ஆடைகளை அணிந்து 23ஆம் திகதி நடைபெறும் போட்டியில் பங்கேற்கலாம். சிறந்த Cosplayer களுக்கு பரிசுகள் வழங்கப்படவுள்ளன.
இந்த பிரத்தியேகமான போட்டித் தொடர் என்பது நாட்டின் வெவ்வேறு பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த கேமர்களுக்கு தமது கல்வியகங்களை பிரதிநிதித்துவப்படுத்தி போட்டியிடுவதற்கு வழிவகுக்கும் வகையில் அமைந்துள்ளது.
கவர்ச்சிகரமான பரிசுகள் வழங்கப்படவுள்ளதுடன், ஒவ்வொரு கேம் பிரிவிலும் வெற்றியீட்டுபவருக்கு இந்த பரிசுகள் வழங்கப்படும். ஒன்லைனில் பதிவு செய்து கொள்வதன் மூலமாக இந்த சம்பியன்ஷிப் போட்டிகளில் பங்கேற்க முடியும்.
இதற்கு பல்கலைக்கழகத்தினால் வழங்கப்பட்ட செல்லுபடியாகும் அடையாள அட்டையை கொண்டிருக்க வேண்டும். ஆனாலும், நிகழ்வு நடைபெறும் தினத்தில் மாணவர்களின் அடையாள அட்டைகள் பரிசோதிக்கப்படும். பல்கலைக்கழகங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் சகல அணி அங்கத்தவர்களும் குறித்த பல்கலைக்கழகத்திலிருந்து மட்டும் பங்கேற்க வேண்டும்.
பதிவுகளுக்கு university.gamer.lk எனும் பக்கத்தை பார்வையிடவும். ஆர்வமுள்ள கேமர்கள் மற்றும் பல்கலைக்கழக மாணவர்கள் மேலதிக விவரங்களை university.gamer.lk எனும் இணையத்தளத்திலிருந்து பெற்றுக் கொள்ளலாம். அல்லது இந்நிகழ்வு பற்றிய விசேட Facebook பக்கமான gamer.lk/interuni2016 இலிருந்தும் பெறலாம்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM