(எம்.ஆர்.எம்.வஸீம்)

நீதிமற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் தலதா அத்துகோரளவுக்கும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் சட்டத்துறை பிரதானி மோனா ஏ. ரிஷ்மாவிக்குமிடையில் சந்திப்பொன்று  நீதி அமைச்சில் இன்று இடம்பெற்றது.

இந்த சந்திப்பின்போது மனித உரிமையை பாதுகாக்க அரசாங்கம் போதுமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது என நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறிசீரமைப்பு அமைச்சர் தலதா அதுகோரள தெரிவித்தார்.

இதன்போது ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் சட்டத்துறை பிரதானி மோனா ஏ. ரிஷ்மாவி, அபிவிருத்தி அடைந்துவரும் நாடு என்றவகையில் இலங்கை மனித உரிமைகளை பாதுகாப்பதற்காக எடுத்துவரும் நடவடிக்கைகளை போற்றுவதுடன் அதற்காக ஐக்கிய நாடுகளின் மனித உரிமை ஆணைக்குழுவின் ஆதரவை தொடர்ந்தும் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுப்போம் என்றார். 

இந்த சந்திப்பில் ஐக்கிய நாடுகள் அமைப்பின் இலங்கை காரியாலயத்தின் நீதித்துறை நடவடிக்கை ஆலோசகர் இஸ்டெல்லா அஷ்கிவ் ரீனொட் மற்றும் நிதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சின் செயலாளர் மீகஸ்முல்ல ஆகியோரும் கலந்துகொண்டிருந்தனர்.