மின் மோட்டர்களைத் திருடிய நபருக்கு பிணை

Published By: Digital Desk 4

12 Feb, 2019 | 08:23 PM
image

கிணறுகளில் பொருத்தப்பட்டிருந்த நீரிறைக்கும் மின் மோட்டர்களைத் திருடிய புத்தளம் பகுதியைச் சேர்ந்த ஒருவர் சாவகச்சேரி இன்று நீதிமன்றால்  பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டார்.

கடந்த 29 ஆம் திகதி கைதடி ஆரியபவான் வர்த்தக நிலையத்தில் உள்ள கிணற்றில் பொருத்தப்ட்டிருந்த 20 ஆயிரம் ரூபா பெறுமதியான மின்மோட்டர் திருடப்பட்டது.

இதனையடுத்து வர்த்தக நிலைய உரிமையாளர் சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தார். இந் நிலையில் நுணாவில் பகுதியில் சந்தேகத்திற்கு இடமான முறையில் நடமாடிய நபரை அப் பகுதி மக்கள் பொலிஸாரிடம் ஒப்படைத்தனர்.

இதனையடுத்து குறித்த நபரிடம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்ட போது கைதடி வர்த்தக நிலையத்தில் மின்மோட்டர் திருடியதை ஒப்புக் கொண்டார்.

மேலும் 7 இடங்களில் மேற்கொண்ட மின்மோட்டர் திருட்டுக் குற்றத்தையும் ஒப்புக் கொண்டார்.

திருடிய மின் மோட்டர்களை யாழ்ப்பாணம் காங்கேசன்துறை சாலையில் உள்ள கடையொன்றில் விற்பனை செய்ததாகவும் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து பொலிஸார் குறித்த கடைக்குச் சென்று விசாரித்த போது இவரால் விற்பனை செய்யப்பட்ட ஏழு மின்மோட்டர்களும் மீட்கப்பட்டன.

திருட்டுப் பொருட்கள் எனத் தெரிந்தும் அவற்றினை விலைக்கு வாங்கியமைக்காக கடை உரிமையாளரையும் கைது செய்து மறுநாள் நீதிமன்றில் முற்படுத்தினர்.

வழக்கு விசாரணைக்கு  எடுக்கப்பட்ட போது மின்மோட்டர்கள் திருடிய நபர் இன்று வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.

கடை உரிமையாளர் இரண்டரை இலட்சம் ரூபா பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டார்.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுக்கப்பட்ட போது திருட்டு நபரை ஒரு இலட்சம் ரூபா பிணையில் செல்ல நீதிவான் உத்தரவிட்டார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02
news-image

பொது சுகாதார பரிசோதகர் மீது துப்பாக்கிச்...

2024-03-29 09:27:51
news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30
news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44