(எம்.எப்.எம்.பஸீர்)

பண்டாரவல தபால் நிலையம் முன்பாக வைத்து, போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் மீது தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டின் சந்தேகத்தின் பேரில் பதுளை மாவட்ட ஐ.தே.க. பாராளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிரியைக் கைதுசெய்ய விசேட நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளதாக பண்டாரவளை பொலிஸார் தெரிவித்தனர். 

அதன்படி  அவரளின் வீடு மற்றும் அலுவலகத்தை சோதனைக்கு உட்படுத்தியதாகவும் எனினும் அவர் அப்போது அங்கு இருக்கவில்லை எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

 அரச ஊழியர் ஒருவருக்கு தடையை ஏற்படுத்தியமை, தாக்குதல் நடத்தி காயம் ஏற்படுத்தியமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் சமிந்த விஜேசிரி மீது சுமத்தப்பட்டுள்ளன.