(ஆர்.விதுஷா)

சைட்டம்  தனியார்  கல்வியில் பயிலும் மாணவர்களில்  கல்வி  தகைமையுள்ள  மாணவர்களின்  பெற்றோரின்  வேண்டுகோளுக்கு  இணங்க  மேற்படி  கல்லூரியில்  கல்வி  பயிலும்  தகைமையுடைய  மாணவர்களுக்கு  இரத்மலானையில்  உள்ள   கொத்தல்லாவைய  பாதுகாப்பு  பல்கலை கழகத்தின்  மருத்துவ  பீடத்தில்  பயிற்சிகளை  பெறுவதற்கான  அனுமதியை  பெற்றுத்தர   ஜனாதிபதிக்கு  கடிதம்  ஊடாக  அனுமதி  கோரப்பட்டுள்ளதான மருத்துவ பீட  மாணவர்  பெற்றொர் சங்க ஊடகப்பேச்சாளர்  வசந்த அல்விஸ்  தெரிவித்தார்.

அரச வைத்திய அதிகாரிகள்  சங்கத்தில் இன்று  இடம் பெற்ற ஊடக சந்திப்பின்போதே  இதை தெரிவித்தார்.

சைட்டம் தனியார் கல்லூரியில்  பயிலும்  கல்வி  தகைமையற்ற   மாணவர்களின் சட்டத்திற்கு  புறம்பான   நடவடிக்கைகளின்  காரணமாககல்வி  தகைமைகளுடன்  சைட்டத்தில்  கல்வி  பயின்ற  மாணவர்களின் வாழ்க்கை  கேள்விக்குறியாகின்றமையை  கருத்தில் கொண்டே  இவ்வாறான  தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.