(ஆர். விதுஷா)

அரகங்வில பகுதியில் காட்டு யானையின் தாக்குதலுக்குள்ளாகி ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த சம்பவம் இன்று அதிகாலை 5.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

இவ்வாறு உயிரிழந்தவர் பிம்புரத்தாவ பகுதியைச் சேர்ந்த 47 வயதுடைய முதியன்சேலாகே ஜயரத்ன என்பவர் ஆவார். 

உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக பொலனறுவை வைத்தியசாலையின் வைக்கப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை அரகங்வில  பொலிசார்  மேற்கொண்டு வருகின்றனர்.