5S க்கான Taiki Akimoto மெரிட் விருதை வெற்றியீட்டியிருந்த S-lon

Published By: Priyatharshan

07 Apr, 2016 | 01:47 PM
image

அண்மையில் கலதாரி ஹோட்டலில் இடம்பெற்ற 20ஆவது JASTECA விருது வழங்கும் வைபவத்தில், வரையறுக்கப்பட்ட S-lon லங்கா தனியார் நிறுவனத்துக்கு 2015ஆம் ஆண்டுக்கான Taiki Akimoto மெரிட் விருது வழங்கப்பட்டது. 

இந்நிகழ்வு இலங்கைக்கான ஜப்பான் தூதுவர் அதிமேதகு கெனிச்சி சுகுனுமா தலைமையில் இடம்பெற்றது. 

இந்நிகழ்வானது ஜப்பான் இலங்கை தொழில்நுட்ப மற்றும் கலாசார சம்மேளனத்தின் மூலமாக வருடாந்தம் ஏற்பாடு செய்யப்படுவதோடு, தனியார் மற்றும் பொதுத்துறைகளைச் சேர்ந்த நிறுவனங்களை வினைத்திறன் வாய்ந்த ஜப்பானிய முகாமைத்துவ கட்டமைப்புகளான 5S மற்றும் Kaizen ஆகியவற்றை பின்பற்றுவதற்கு ஊக்குவிப்பதும் இதன் முதன்மை நோக்கமாகும்.

5S Merit விருது தொடர்ச்சியாக வழங்கப்பட்டதன் ஊடாக 5ளு கொள்கைகள் மீது தொடர்ச்சியாக மேம்படுத்தல்களுக்கு கட்டுக்கோப்பான மற்றும் ஒழுக்கபூர்வமான வழிமுறைகளை ஏற்படுத்துதல் இதன் நோக்கமாகும். 

S-lon லங்காவினால் காண்பிக்கப்படும் அர்ப்பணிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. Taiki Akimoto 5S விருதானது நிறுவனங்களின் சகல திறமையான செயலாக்கங்களை அங்கீகரித்து அவற்றை கௌரவிப்பதோடு விண்ணப்பதாரிகளை மதிப்பிடுகையில் 5S தரங்களின் பரந்தளவிலான கட்டளை விதிகளை கண்டிப்பாக கவனத்தில் கொள்கிறது. 

இந்த திட்டத்தை பின்பற்றி, சிறந்த செயற்பாடுகள் S-lon அலுவலகத்தில் முன்னெடுக்கப்படுகின்றமையை அவதானிக்க முடிவதுடன் இதன் மூலமாக, 5S கொள்கைகளை S-lon அதிகளவு உற்பத்தித்திறன் வாய்ந்த வகையில் நிறுவனத்தின் சகல மட்டங்களிலும் பின்பற்றி வருகின்றமையும் உறுதிப்படுத்தப்படுகின்றது. 

S-lon இல் 5S முறை வெற்றிகரமாக நிறுவப்பட்டதைத் தொடர்ந்து, உற்பத்தித்திறன், செலவீனம்,  ஒழுக்கப்பாங்கு, பாதுகாப்பு, வினைத்திறன் மற்றும் தரம் போன்ற முக்கிய செயல்திறன் சுட்டிகள் Key Performance Indicators (KPIs)மேம்படுத்தப்பட்டுள்ளன. இதன் மூலம், முன்னணி குழுநிலைச் செயற்பாடுகள், ஆர்வம், உரித்துடைமை மற்றும் ஆக்கத்திறன் ஆகியனவும் உயர்ந்துள்ளன.

இன்றைய காலகட்டத்தில் சந்தை முன்னோடி என்ற வகையில் பல்வேறு வர்த்தக நாமத்தெரிவுகளை உற்பத்தி செய்து விநியோகிக்கும் நடவடிக்கைகளை S-lon முன்னெடுக்கிறது. 

இதில் நீர் குழாய்கள் மற்றும் பொருத்திகள், மழை நீர் சேகரிப்பு கட்டமைப்புகள், கழிவுநீர் வெளியேறும் குழாய்கள் மற்றும் பொருத்திகள், கொதிநீர் குழாய் கட்டமைப்பு, குரோம் பூசப்பட்ட ஃபோசட்கள் மற்றும் உதிரிப்பாகங்கள், போல் வால்வ் தெரிவுகள், தோட்ட மெஷ் (சல்லடைக் கம்பிகள்) மற்றும் உதிரிப்பாகங்கள், சோல்வன்ட் சீமெந்து மற்றும் நீர் பம்பிகள் போன்றன உள்ளடங்கியுள்ளன.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

SLIM National Sales Awards 2024...

2025-02-08 18:18:45
news-image

யூனியன் அஷ்யூரன்ஸ் பாங்கசூரன்ஸ் MDRT தகைமையாளர்களுக்கான...

2025-02-08 18:18:18
news-image

முன்பள்ளி கல்வியை மேம்படுத்த UNICEFஉடன் இணையும்...

2025-02-06 10:13:01
news-image

விலை உறுதிப்பாடு : தவிர்க்க முடியாததொன்றா?

2025-02-05 18:33:08
news-image

கச்சா எண்ணெய் விலையில் மாற்றம்

2025-02-05 17:22:13
news-image

இலங்கையின் "சிட்டி ஆஃப் ட்ரீம்ஸ்" கெசினோ ...

2025-02-05 17:05:26
news-image

சம்பத் வங்கி மற்றும் யூனியன் அஷ்யூரன்ஸ்...

2025-02-05 11:44:52
news-image

TAGS விருதுகள் 2024 – Prime...

2025-02-05 11:41:48
news-image

வடபிராந்திய முயற்சியாண்மைகளை வலுப்படுத்த டேவிட் பீரிஸ்...

2025-02-03 14:56:40
news-image

‘C'est La Vie’– பிரான்ஸ் நாட்டின்...

2025-02-02 09:41:53
news-image

இலங்கையின் சிறந்த ஆயுள் காப்புறுதி நிறுவனமாக...

2025-01-30 12:16:32
news-image

VIMAN வீதி கிரிக்கெட் போட்டியை வழிநடத்துவதற்காக ...

2025-01-30 11:55:21