(எம்.எப்.எம்.பஸீர்)
ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்கவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கை இணக்கப்பாட்டுடன் முடித்துக்கொள்ள கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

2015 ஜனாதிபதி தேர்தல் தற்போதைய ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோர் கையொப்பமிட்டதாகத் தெரிவிக்கப்படும் அறிக்கை ஒன்றை ஊடகங்களுக்கு வெளியிட்டு இனவாதத்தைத் தூண்டுவதற்கு முயற்சித்தமை தொடர்பில் திஸ்ஸ அத்தநாயக்கவிற்கு எதிராக சட்ட மா அதிபரால் தொடரப்பட்டுள்ள இந்த வழக்கு தாக்கல் கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி முன்னிலையில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போது பிரதிவாதி மீதான குற்றப்பத்திரத்தை மீளப் பெறுவதற்கு பிரதிவடஹிகள் சார்பில் சட்டமா அதிபருக்கு கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக, சிரேஷ்ட பிரதி சொலிஷ்ட்டர் ஜனரல் திலிப் பீரிஸ் மன்றுக்கு அறிவித்தார். அத்துடன் குறித்த வழக்கை நிறைவுசெய்வதற்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் இணக்கம் தெரிவித்துள்ளதாக அவர் கூறினார்.
இதன்போது வழக்கின் முதல் சாட்சியாளரான பிரதமர் ரணில் சார்பில் மன்றில் ஆஜரான சட்டத்தரணி நிரோஷன் பெரேரா, பிரதமர் வழக்கை துரிதமக இணக்கப்பாட்டுடன் முடிவுருத்திக்கொள்ள விரும்பும்போதும், அது வழக்கை முடிக்க மன்னிப்பு கோருவதன் ஊடாக முடிப்பதா அல்லது வேறு வழி வகைகள் ஊடாக முடிவுறுத்துவதா என்பது தொடர்பில் அறிந்துகொள்ள தமது சேவை பெறுநர் ஆவலாக உள்ளதாக கூறினார்.
இந் நிலையில் மீளவும் கருத்துக்களை முன்வைத்த சிரேஷ்ட பிரதி சொலிசிட்டர் ஜெனரால் திலீப பீரிஸ், இது தொடர்பில் 2 ஆவது சாட்சியாளரான ஜனாதிபதியின் நிலைப்பாட்டை எழுத்து மூலம் கோரவுள்ளதாகவும் அதன் பின்னர் அது குறித்து தீர்மனைப்பதாகவும் அரிவித்தார்.
இதன்போது பிரதிவாதியான திஸ்ஸ அத்தநாயக்க சார்பில் மன்றில் ஆஜரான அவரது ஜனாதிபதி சட்டத்தரணி காலிங்க இந்திரதிஸ்ஸ, இவ்வழக்கை குறுகிய வழி முறையொன்றில் முடித்துக்கொள்ளவே தாம் எதிர்ப்பார்ப்பதாக கூறினார்.
இந் நிலையில் இவ்வழக்கில் இணக்கப்பாடு தொடர்பிலான முடிவை அறிவிக்க வழக்கை எதிர்வரும் மார்ச் 25 வரை நீதிபதி ஒத்தி வைத்தார்.











கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM