(எம்.ஆர்.எம்.வஸீம்)

யுத்தத்தை வெற்றிகொண்ட இராணுவ வீரர்களை மனித உரிமை பேரவை கூட்டத்தொடருக்கு முன்னர் கைதுசெய்ய அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகின்றது.இதனை உடனடியாக தடுத்து நிறுத்த ஜனாதிபதி நடவடிக்கை எடுக்கவேண்டும் என தேசிய சுதந்திர முன்னணி பாராளுமன்ற உறுப்பினர் ஜயன்த சமரவீர தெரிவித்தார்.

இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர்,

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 40ஆவது கூட்டத்தொடர் எதிர்வரும் 25ஆம் திகதி ஆரம்பாகின்றது. இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்த, 2015ஆம் ஆண்டு இடம்பெற்ற மனித உரிமை பேரவையில் இராணுவத்தினரால் யுத்தக்குற்றம் இடம்பெற்றதாக அன்று வெளிவிவகார அமைச்சராக இருந்த மங்கள சமரவீர ஏற்றுக்கொண்டிருந்தார். அதன் பிரகாரம் யுத்தக்குற்றத்துடன் தொடர்புபட்ட இராணுவ வீரர்களுக்கு உரிய தண்டனையை பெற்றுக்கொடுக்க மனித உரிமை பேரவை கால அவகாசம் வழங்கியிருந்தது.

அதனடிப்படையில் எதிர்வரும் 25 ஆம் திகதி ஆரம்பமாகும் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 40 ஆவது கூட்டத்தொடருடன் குறித்த கால அவகாசம் நிறைவடைகின்றது. அதனால் இராணுவ வீரர்களை கைதுசெய்து சிறையில் அடைக்கும் பட்டியலில் எதிர்வரும் 25 ஆம் திகதிக்கு முன்னர் முன்னாள் கடற்படை தளபதி வசந்த கரண்ணாகொடவை கைதுசெய்ய அரசாங்கம் முயற்சித்து வருகின்றது.