வடக்கு-கிழக்கில் தாதியர்களின் தட்டுப்பாடு; ஜூன் மாதம் நிவர்த்தி செய்யப்படும்

Published By: Vishnu

12 Feb, 2019 | 05:16 PM
image

இந்த வருடம் ஜூன் மாதம் 1500 தாதியர்கள் பயிற்சியை முடித்து வெளியாக இருப்பதால் அவர்களை கொண்டு வடக்கு-கிழக்கு வைத்தியசாலைகளில் நிலவும் தாதியர்கள் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய முடியும் என சுகாதார இராஜாங்க அமைச்சர் பைசல் காசிம் தெரிவித்துள்ளார்.

பொத்துவில் ஆதார வைத்தியசாலையில் இடம்பெற்ற சீன நிதி உதவியின் கீழான புதிய கட்டடத்துக்கான அடிக்கல் நாட்டு நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே இவ்வாறு தெரிவித்துள்ளார். 

அவர் அங்கு தொடர்ந்தும் குறிப்பிடுகையில்,

நான் பிரதி அமமைச்சரான போது சம்மாந்துறைக்கும் பொத்துவில்லுக்கும் வைத்தியசாலைக் கட்டடங்கள் அமைத்துத் தருவதாக வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்ற முடிந்துள்ளது. இந்த கட்டடத்தை மாத்திரம் அமைப்பதற்கு 554 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் 554 மில்லியன் ரூபா பெறுமதியான உபகரணங்கள் வழங்கப்படவுள்ளது. இதற்கு அப்பால் இன்னும் 50 வருடங்களுக்கு பொத்துவில்லுக்கு எந்தவொரு வைத்தியசாலை கட்டடங்களோ உபகாரணங்களோ தேவை இல்லை. 

குறைந்தது 25 வருடங்கள் நிலைத்து நிற்கும் வகையில்தான் நாம் எமது சேவைகளை செய்து வருகிறோம். நான் அமைச்சராக ஆனது முதல் இந்த வைத்தியசாலையின் தேவைக்காக 75 மில்லியன் ரூபா நிதி செலவிடப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் வழங்கப்படும் உணவுகள்...

2024-04-16 14:22:41
news-image

கொழும்பு கோட்டை ரயில் நிலைய மேடையை...

2024-04-16 13:46:47
news-image

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவது குறித்து சில...

2024-04-16 13:15:21
news-image

பாதாள உலகக் குழுக்களைச் சேர்ந்த 7...

2024-04-16 13:15:00
news-image

யாழில் இரண்டரை கோடி ரூபாய் மோசடி...

2024-04-16 12:43:04
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-04-16 12:54:10
news-image

சுவிஸ் நாட்டு பெண்ணை ஏமாற்றியதாக யாழ்.பொலிஸ்...

2024-04-16 12:07:37
news-image

ஹக்மனவில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு இளைஞர்...

2024-04-16 12:54:37
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-16 11:56:52
news-image

காதலியையும் காதலியின் தாயாரையும் கூரிய ஆயுதத்தால்...

2024-04-16 11:32:55
news-image

ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னராக வாகன வசதியை...

2024-04-16 11:23:44
news-image

கொவிட் ஆலோசனைகள் குறித்து வைத்தியர் சத்தியமூர்த்தியின்...

2024-04-16 11:19:30