bestweb

புற்றுநோயை குணப்படுத்த உதவும் நவீன புரோற்றான் சிகிச்சை முறை

Published By: Digital Desk 4

12 Feb, 2019 | 05:09 PM
image

நுரையீரல், கண், கணையம், குடல், கழுத்து, மூளை, ப்ரொஸ்டேட், தண்டுவடம் ஆகிய பகுதிகளில் ஏற்படும் புற்றுநோய்களுக்கு இதுவரை சிறப்பான மற்றும் துல்லியமான கதிர்வீச்சு சிகிச்சை முழுமையாக இருந்ததில்லை. 

தற்போது நடைமுறையில் உள்ள சிகிச்சை முறைகளிலும் பின்விளைவாக இரண்டாம் நிலை புற்றுநோய் தாக்கம் வருவதற்கான வாய்ப்பு உண்டு. இந்நிலையில் மேற்கூறிய உடல் உறுப்புகளில் புற்று நோய் ஏற்பட்டால், பின்விளைவு வராமலும், குறைவான அமர்வுகளிலேயே சிகிச்சையளித்து குணப்படுத்தும் புரோற்றான் சிகிச்சை என்ற கதிர்வீச்சு சிகிச்சை அறிமுகமாகியிருக்கிறது.

இந்த சிகிச்சை புரோற்றான் பீம் என்ற கருவியின் துணையுடன் வழங்கப்படுகிறது. இதில் செறிவூட்டப்பட்ட கதிர்கள், பல்வேறு கட்டங்களாக வடிகட்டப்பட்டு, பின் cutting edge pencil beam scanning technology என்ற தொழில்நுட்பத்தின் அடிப்படையில் புற்றுநோய் தாக்கப்பட்டுள்ள இடத்திற்கு மட்டும் துல்லியமாக கதிர்வீச்சு சிகிச்சை அளிக்கப்பட்டு, புற்றுநோய் செல்கள் முற்றாக அழிக்கப்படுகிறது.

இதன் போது நல்லநிலையில் உள்ள திசுக்களோ இரத்த நாளங்களோ பாதிப்படைவதில்லை. அத்துடன் இவை வீரியமாக இருப்பதால் குறைவான அமர்வுகளிலேயே நல்ல பலனை அளித்து வருகின்றன.

தற்போது இத்தகைய சிகிச்சை சென்னையிலும் பிரபலமான தனியார் வைத்திசாலைகளிளும் அளிக்கப்படுகிறது. அதனால் இனி புற்றுநோயை முழுமையாக கட்டுப்படுத்தி ஆரோக்கியமாக வாழ இயலும்.

டொக்டர் கோவிந்தராஜன்

தொகுப்பு அனுஷா.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

புற்றுநோயிற்கு நிவாரணம் அளிக்கும் நவீன சத்திர...

2025-07-09 17:51:11
news-image

ஒற்றைத் தலைவலிக்கான அறிகுறிகள் என்ன?

2025-07-07 16:51:22
news-image

கட்டுப்படாத குருதி அழுத்தப் பாதிப்பிற்கான நவீன...

2025-07-05 17:18:51
news-image

ஆட்டிச பாதிப்பை ஏற்படுத்தும் ஃப்ரஜைல் எக்ஸ்...

2025-07-04 20:54:50
news-image

கிளியோமா எனும் மூளை நரம்பு புற்றுநோய்...

2025-07-03 16:23:57
news-image

முதுகு தண்டுவட வலி பாதிப்பை சீரமைக்கும்...

2025-07-02 17:44:27
news-image

பிரிஃபார்மிஸ் சிண்ட்ரோம் பாதிப்பும் நவீன சிகிச்சையும்

2025-07-01 17:29:07
news-image

சிறுநீரக நீர்க்கட்டி பாதிப்பிற்குரிய சிகிச்சை

2025-06-30 18:38:05
news-image

ஆரம்ப நிலை சர்க்கரை நோயாளிகளுக்கு சிகிச்சை...

2025-06-27 18:08:50
news-image

செர்விகல் மைலோபதி எனும் முதுகெலும்பில் ஏற்படும்...

2025-06-26 17:34:32
news-image

புராஸ்டேட் புற்றுநோயிற்கு நிவாரணம் அளிக்கும் நவீன...

2025-06-25 17:16:50
news-image

'ஸ்லிப் டிஸ்க் சயாடிகா' எனும் கால்...

2025-06-23 13:06:56